கவிஞர்: பவானி பாலசுப்பிரமணியம்
மகரந்தக்கூட்டின் தூசுகளை தட்டியே
வண்ணமிசைத்துக் கொண்டாயோ..//
குவளை இதழை தொட்டு தொட்டே
உன் தாகம் தீர்த்து காதலிசைத்தாயோ..//
வாடிய மலரிடை இதழுக்கும்
உன் சாயம் தந்தே உயிர்ப்பித்தாயோ..//
உன் செயற்கை மகரந்த துகளாய்
வம்ச விளக்கை ஆற்றி பறந்தாயோ..//
எட்டு நாள் வாழ்க்கையின் வண்ணமடி நீ
அதை நினைத்தாடி சோறாமல்..//
எமை ரசித்தாடி உனைத் துரத்தியாட
மகிழ்விப்பாயடி வண்ணமிட்ட உயிரே..//
ஓடி பிடித்தால் பறந்து பாசங்கு காட்டி
அமைதியாகி இருக்க வந்து எனை முத்தாடி போவாயே..//
நிறத்தழகியே நீ அஃரினை அல்ல அல்ல
உயர்திணை வித்தகியடி நீ..//
வெறிநாற்றம் உன் இதழிடை சுமக்க
என் மன நாற்றில் முறுவல் பூ வண்ணமே நீயடி..//
..பவா🐝
(வெறிநாற்றம் -இயற்கை மணம்)