#chithiraithiruvila #சித்திரை_திருவிழா
அனைவருக்கும் அரூபி தளத்தின் அன்பான வணக்கம் 😀
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழி பொங்கல் பண்டிகைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திடவும் தேவையான ஒரு மந்திரமாகும்.
ஆகவே, வரவிருக்கும் சித்திரைப்புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு ‘சித்திரை திருவிழா’ என்ற சிறுகதை போட்டி ஒன்று அரூபி தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் படைப்பாளர்கள் ‘மாற்றம்’ என்ற கருவை முன்னிறுத்தி சிறுகதைகளை படைத்திடலாம்.
இம்மாற்றமானது மன மாற்றத்தையும் குறிக்கலாம், குண மாற்றத்தையும் குறிக்கலாம். அது அன்பாகவும் இருக்கலாம், பண்பாகவும் இருக்கலாம்.
காதல், குடும்பம், திகில், கிரைம் என்று எவ்வகையாகினும் அதில் ‘மாற்றம்’ என்ற கருவை திறம்பட வெளிக்கொணரும் சிறுகதையே சிறந்த படைப்பாக கருதப்படும்.
ஆகவே, நச்சென்ற கருவோடு டக்கென சிறுகதை ஒன்றை ரெடி செய்து இன்றே போட்டியில் கலந்துக்கொள்ள தயாராகுங்கள்.
1. போட்டி விதிமுறைகள்
* தள வேறுபாடோ அல்லது பாரபட்சமோ கிடையாது, விரும்பியவர்கள் யாராகினும் போட்டியில் கலந்துக்கொள்ளலாம்.
* பேர் சொல்லியும் எழுதிடலாம், சொல்லிடாமலும் எழுதிடலாம். எழுதினால் சரி!
* ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதிடலாம். அதை இறுதி நாளுக்குள் அனுப்பினால் சரி!
* வார்த்தைகள்: 1,000 – 1,500 (குறையாமலும் மிகாமலும் இருந்திட வேண்டும்).
* சிறுகதைகளை 2022arubi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டும்.
* சிறுகதையை MS Word document (font Unicode 10 – 12) எழுதி மெயிலில் இணைத்திட வேண்டும்.
* மெயிலில் கீழ்கண்ட குறிப்புகளை தெளிவாக குறிப்பிடவும்: இவைகளை டாக்குமெண்டில் இணைக்காதீர்கள்.
எழுத்தாளர் பெயர்:
எழுத்தாளரின் போட்டிக்கான பெயர்:
சிறுகதையின் தலைப்பு:
அலைப்பேசி எண்:
* போட்டிக்கான சிறுகதைகளை சமர்பித்திடும் இறுதி நாள்: 20.04.2024
* தளத்தில் கதையை பதிவு செய்த பின் மாற்றங்கள் ஏதும் செய்திட இயலாது. முக்கியமான அவசியம் இருப்பின் மட்டுமே சம்பந்தப்பட்ட எழுத்தாளர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு தகுந்த காரணங்களை தெரியப்படுத்தினால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* ஆகவே, சிறுகதையை மெயில் செய்திடும் முன் சரிவர எல்லாவற்றையும் ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
* போட்டிக்காக பெறப்படும் சிறுகதைகள் அனைத்தும் அரூபி தளத்தில் ‘சித்திரை திருவிழா’ என்ற பகுதியில் 01.04.2024ஆம் (திங்கட்கிழமை) தொடங்கி 20.04.2024ஆம் (சனிக்கிழமை) வரை பதிவிடப்படும்.
* சிறுகதைகளுக்கான திரியோ, அரூபி நாவல்ஸ் குழு என்ற முகநூல் குரூப்பில் பதிவிடப்படும்.
* முதல் மூன்று சிறந்த சிறுகதைகள் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படும்.
* அதிகமான பிழைகள் இருப்பின் சிறுகதை வெற்றி பெரும் வாய்ப்பை இழந்திடும். ஆகவே, ஒருமுறைக்கு இருமுறை கவனமாய் பிழைகளை திருத்திய பின் சிறுகதைகளை அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
* வெற்றி தோல்வியைத் தாண்டி, போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னும், போட்டிக்காக தளத்தில் பதிவேற்றப்பட்ட சிறுகதைகள் அத்தனையும் தளத்திலிருந்து நீக்கப்படாது.
* போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 01.05.2024 (திங்கட்கிழமை)
* போட்டியின் முடிவுகள் வெளிவரும் வரை போட்டிக்காக அனுப்பப்படும் படைப்புகள் எதுவும் வேறெந்த இடத்திலும் பதிவிடக்கூடாது. முடிவிற்கு பின், எழுத்தாளர்கள் விரும்பினால் அவர்களின் சிறுகதையை வேறிடத்தில் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.
2. போட்டியாளர்களுக்கான பரிசு
* முதல் பரிசு: 500
* இரண்டாம் பரிசு: 400
* மூன்றாவது பரிசு: 300
* முதலில் தேர்வாகும் சிறந்த 10 – 20 சிறுகதைகள், சிறுகதைகள் தொகுப்பாய் அச்சிடப்படும். தேர்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு சிறுகதைகள் தொகுப்பு இலவசமாய் பரிசளிக்கப்படும்.
* ஆகவே, போட்டியாளர்கள் மெயில் அனுப்புகையில் கூடுதல் சிரத்தை எடுத்து தகவல்களை சரியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக்கொண்டோருக்கும் டிஜிட்டல் நற்சான்றிதழ் வழங்கக்கப்படும்.
3. வாசகர்களுக்கான போட்டி மற்றும் பரிசு
* தளத்தில் பதிவிடப்படும் போட்டி சிறுகதைகள் எல்லாவற்றையும் படித்து விமர்சனம் எழுதிட வேண்டும்.
*விமர்சனத்தை #chithiraithiruvila அல்லது #சித்திரை_திருவிழா என்ற ஹேஸ்டேக் கொண்டு அரூபி நாவல்ஸ் முகநூல் குழுவில் பதிவேற்றிட வேண்டும்.
* விமர்சனத்தை சொந்த டைம் லைனின் பதிவேற்றம் செய்பவர்கள், அரூபி நாவல்ஸ் குழு என்ற முகநூல் குழுவிலும் அதை மறக்காமல் ஷேர் செய்திட வேண்டும்.
* போட்டியின் இறுதி நாளான 20.04.2024ஆம் அன்று, எந்த வாசகர் எல்லா போட்டி கதையையும் படித்து தவறாது விமர்சனம் எழுதி, அரூபி நாவல்ஸ் குழுவில் மறக்காமல் ஹேஸ்டேக் செய்கிறாரோ அவரே வெற்றி பெற்ற வாசகர் ஆவார்.
* சிறப்பு தொகையும் சிறுகதை தொகுப்பும் அவருக்கு பரிசாக வழங்கப்படும்.
சித்திரையில் தொட்டதெல்லாம் துலங்கி சகல சௌபாக்கியமும் கிடைக்க பெற அனைவருக்கும் அரூபி தளத்தின் அட்வான்ஸ் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😁❣️
நன்றி. வணக்கம்.✌️
#amydeepz
#Arubi
@highlight