ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: வேலை வேண்டும்

by admin 1
65 views

அப்போது தான் விஸ்வநாதன் அந்த விலை உயர்ந்த
காரை வாங்கியிருந்தார். அன்றைய தினத்தில் அணைத்து
வசதிகளையும் உள்ளடக்கியது. அவசர காலத்தில்
ஆமையை போன்று தனக்குள் சுருண்டு கொண்டு தன்னை
தானே காப்பாற்றிக்கொள்ளும் வசதியையும் கொண்டது.
சென்னையில் மட்டும் அல்ல இந்தியாவின் அணைத்து
நகரங்களிலும் அந்த காரை கையாளுவதற்கு
திறமையான ஓட்டுனர்கள் கிடைக்காததால்,
சிக்காக்கோவிலில் வசிக்கும் தனது மகனை தொடர்பு
கொள்ள, அவர் ஒரு ஓட்டுனரை தனி விமானம் ஒன்றில்
அனுப்பிவைத்தார்.
நள்ளிரவு – 12.00 மணி. வீட்டின் மொட்டைமாடியில்
இருந்து உறும் உறும் என்று ஒலி கேட்க, விஸ்வநாதனும்,
அவருடைய மனைவியும் விரைந்து வந்து பார்த்தனர்.
வானில் இருந்து ஒரு ஒளிக்கற்றை மொட்டை மாடியில்
ஆய்வு நடத்தியது. சிறிது நேரத்தில் வட்டவடிவில் ஒரு
பிம்பம் தரையில் பதிய, அடுத்த 30 நொடிகளில், பறக்கும்
தட்டு போன்ற ஒரு சிறிய ரக விமானம் வட்டத்திற்குள்
இறங்கியது. நான்கு கால்களும் தரையில் பதிய, கதவை
திறந்து கொண்டு, மெலிந்த முருங்கைக்காய் போன்ற
உருவம் விஸ்வநாதனை பார்த்து தலை வணங்கியது.

அதை தொடர்ந்து இன்னொரு உருவமும் வந்து சேர்ந்து
கொண்டது. உருவங்கள் பேசின.
“நாங்கள் ஏலியன்கள். செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு
லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜோவியன்
கிரகத்தில் வசித்து வருகிறோம். எங்களுடைய கிரகத்தின்
ஜனத்தொகை உங்கள் பூமியின் ஜனத்தொகையை
காட்டிலும் பத்து மடங்கு அதிகம். தற்போது எங்களுடைய
கிரகத்தில் வேலையில்லாத நிலை உருவாகியதால்,
நாங்கள் இந்த வான்வெளியில் உள்ள வேற்று
கிரகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய
ஆரம்பித்துள்ளோம். உங்களுடைய கார் தயாரிப்பு
நிறுவனம் எங்களுடைய ஏஜென்சியை தொடர்பு கொள்ள,
எங்களுடைய ஏஜென்சி எங்களை அனுப்பியுள்ளது. நீங்கள்
சொல்லும் அனைத்துவகை வேலைகளையும் செய்ய
தயாராக இருக்கிறோம்”.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாக வட
மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வருவது ஒருபுறம்
இருக்க, தற்போது வேற்று கிரகங்களிலும் இருந்தும்
தொழிலாளர்கள் வர ஆரம்பித்துள்ளதை கண்ட மனித
வளத்துறை அமைச்சர் விஸ்வநாதன் மயங்கி விழ, மனைவி
மஞ்சுளா அவரை தாங்கிக்கொண்டார்.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!