ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: மிருதன்

by admin 1
161 views

கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய நடுநடுங்கிப் போய் அமர்ந்து
இருந்தாள் நித்ய ஶ்ரீ.
எப்படி இது சாத்தியம் தனது கணவனை ஒரு கணம் பார்த்து விட்டு தன் குழந்தையை
வெறித்துக் கொண்டு இருந்தாள்.
“ஶ்ரீ பிளீஸ் டோண்ட் க்ரை மா… இதை நாம அழிச்சிடலாம்”
“ஸ்டாப் இட் தேவ்…நீங்க ஒரு கைனோ டாக்டர் ஆஹ் இருந்திட்டு இப்படி எப்படி வாய்
கூசாமல் பேச முடியிது? என்ன தான் இருந்தாலும் நான் சுமந்து பெத்து எடுத்த குழந்தை
இது ஆரம்பத்துல ஸ்கேன் பண்ணாமல் விட்டது தான் நம்ம பிழை தேவ் பட் இப்போ ஐ
கான்ட் என தனது உதிரத்தில் உருவான அந்த எலியன் குழந்தையை வெறித்துக்
கொண்டே குரல் தளுதளுக்கக் கூறினாள்.

“வாட்? என அதிர்ந்தவன் எப்படி டி நாம இந்த சொசைட்டில இதை வளர்கிறது என்றவன்
மேலும் இப்போவே இந்த ஹாஸ்பிடல் ஃபுல்லா இந்த நியூஸ் பரவி இருக்கும் டி பிளீஸ்
நாம வேற குழந்தை பெத்துக்கலாம் மா பிளீஸ் கோ ஆபரேட் பண்ணு.”

அவனை பார்த்து “முறைத்தவள் அடுத்த குழந்தையும் இப்படி பிறந்தால் என்ன
பண்ணுவீங்க தேவ்?”

அவனிடம் மௌனம்.
“எப்படி தேவ் இது சாத்தியம்? நாம ரெண்டு பேருமே நார்மல் இப்படி ஒரு குழந்தையா
நமக்கு?” என்றவள் கண்கள் மூடிய படி தூங்கும் அந்தக் குழந்தை ஏலியனை பார்த்துக்
கொண்டு கேட்டவளுக்கு ஜீரணிக்கவே முடியவில்லை.

கதைத்துக் கொண்டு இருந்தவளுக்கு விழிகள் சொருக “தேவ் தலை சுத்துது” என
சொல்லிக் கொண்டே கண்கள் சொருக மயங்கி விட்டு இருந்தாள் நித்ய ஶ்ரீ.

அலைபேசியை எடுத்து போலீஸ் முதற் கொண்டு சிலருக்கு தகவல் சொன்னவன் அடுத்து
சிலமணிநேரங்களில் வந்தவர்களிடம் தனது மற்றும் மனைவியின் அனைத்து
ரிபோர்ட்களையும் காஃபி எடுத்து சமர்பித்தவன் அவனே அந்த ஏலியன் உருவில்

இருக்கும் குழந்தையை தொட்டில் போல அமைக்கப்பட்ட பாதுகாப்பான கூண்டில்
வைத்து ஒப்படைத்து விட்டான்.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!