படைப்பாளர்: சு.தமிழ்ச்செல்வன்
என் வீட்டுக்குள் எனக்கே தெரியாமல், யாரோ ஒருவர் வந்து விட்டார். யார் நீ என்றேன், நான் ஒரு ஏலியன் உன்னை பார்க்க வந்தேன். உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர், என்னை மட்டும் ஏன் பார்க்க வந்தாய், இப்ப மணி 9.00 நான் 10.00 மணிக்கு போய்டுவன்.
அதுக்குள்ள எனக்கு சாப்பாடு போடு. பசிக்குது சரிவா ஆம்லேட் போட்டு தறேன்.நான் சைவம் பா, ஜயோ உனக்கு தெரியாத பூமில 2020க்கு அப்பறம் முட்டை எல்லாம் சைவம் தான். எங்க கிரகத்துல அது அசைவம் தான். எனக்கு வேண்டாம் சரி நீ ஆம்பளையா பொம்பளையா? எங்களுக்குள்ள ஆண் பெண் கிடையாது.
அப்பறம் எப்படி குழந்தை எல்லாம் இப்ப சொன்னியே முட்டை அப்படிதான் அது எப்படி அத நாங்க செயற்கையாக உருவாக்கி இருக்கோம். அதுல என்னோட எச்சி இன்னொரு ஏலியன் எச்சி அவ்ளோதான் குட்டி ஏலியன் ரெடி.
அப்போ காதல் அங்கயும் இருக்கா ஆமா காதல் இருத்தாத எச்சி வரும் இல்லாட்டி வராது. சாதி மதம் இதுலாம் அப்படினா? பணம் இருக்கா
அது என்ன… ஐயோ அப்பறம் எப்படி வாழுறீங்க வாழ்வதற்கு வீடு உடை உணவு காற்று நெருப்பு என பஞ்சபூதம் போதும். அது உங்க கிரகத்துல பூமி அப்படி இல்ல, அப்போ நான் கெளம்புறன் உன் பூமி எனக்கு செட்டாகாது. போ என்ன மட்டும் ஏன் பாக்கவந்த சொல்லிட்டு போ….
நான் ஏலியனு சொன்ன எவனும் நம்ப மாட்ட உன்ன தவிர ஏன்ன நீ
தான் இழிச்சவாய், எங்க அம்மாக்கு அப்பறம் உனக்குதான் என்ன நல்லா தெரிஞ்சிருக்கு நானும் உன்னோட வந்துடுறன், உன் கிரகத்துக்கு. உன்னால எங்க கூட வாழ முடியுமா?
முடியும்.” யாதும் ஊரே யாவரும் கேளிர்”
முற்றும்.
