எழுத்தாளர்: சங்கீதா ராம்நாத்
“அத்த அத்த”
” என்னம்மா செல்லம்?”
” அம்மாவுக்கு என்ன ஆச்சு?”
” அம்மாவுக்கு ஒன்னும் ஆகலமா சும்மா ஆஸ்பத்திரிக்கு போறோம் நீ பயப்படாத, நீ தைரியமாயிரு என்ன”
” சரி அத்த நீயும் அம்மா கூடயே இரு எங்கேயும் போயிராத”
” சரி செல்லம் நான் அம்மா கூடயே இருக்கேன்”
” அத்த இப்ப அம்மா கையில என்ன குத்துறாங்க?” “இது குளுக்கோஸ் மா சத்துக்காக போடுவாங்க”
” அம்மாவுக்கு வலிக்குமே?”
” அது போட்டா தான் அம்மாவுக்கு நல்லா இருக்கும்”
” அத்த இவங்கல்லாம் யாரு?”
” இவங்கல்லாம் டாக்டர், நர்ஸ்மா செல்லம் பயப்படாதே, நான் உங்க அப்பாவ போய் பாத்துட்டு வரேன்”
” பிரியா உன் கூட லேபர்வாடுக்கு யாரு வரப் போறாங்க?”
“என்னோட அண்ணி வருவாங்க”
” நீ உன்னோட கணவரை பக்கத்துல வைக்காம உங்க அண்ணியை பக்கத்துல வச்சிருக்கீங்க? எல்லாரும் அவங்க கணவர் இல்லனா அம்மா அத்தை இப்படி யாராவது தான் பக்கத்துல இருப்பாங்க”
” மேடம் எங்க அண்ணிக்கு கல்யாணம் ஆகி 9 வருஷம் ஆகுது இந்த குழந்தை பிறக்கிறது பார்க்கிற சந்தோஷத்துல அவங்களும் கருத்தரிக்கனுங்கறதுக்காக தான் என் பக்கத்துல வச்சுக்கிட்டேன் ”
“உன்னோட கணவர் வரலையா?”
“அவங்க வெளியே இருக்காங்க”
“சரி பிரியா தைரியமா இருமா பயப்படாத ,நீ யார்கிட்டயாவது பேசணுமா?”
” என்னோட அத்தை கிட்ட பேசணும்”
“நர்ஸ் அவங்கள வர சொல்லுங்க”
“யம்மா கொஞ்சம் வலிய பொறுத்துக்கோ அத்த வெளியே இருக்கேன் பயப்படாத என்ன உன் வீட்டுக்காரனை வர சொல்றேன் அவன் கிட்ட கொஞ்சம் பேசு”
“சரி அத்த “
“பிரியா பயப்படாதே, நாங்க எல்லாம் வெளிய தான் நிக்கிறோம் சங்கீதா உன் பக்கத்துல இருந்துக்குவா , இரு உங்க அம்மாவை வர சொல்றேன்”
“அத்த எல்லாரும் எதுக்கு அம்மா கிட்ட இப்படி சொல்றாங்க தைரியமா இருன்னு?”
” ஏன்னா என் குட்டி செல்லம் அம்மா வயித்துக்குள்ள இருந்து வெளியே வரணும்ல அதுக்குத்தான் செல்ல குட்டி அப்படி சொல்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல நீ வெளியே வந்துருவ அப்ப நம்ம ஜாலியா விளையாடலாம்”
” ஏ பிரியா பயப்படாதடி தைரியமா பெத்துட்டு வாடி அம்மா வெளியே தான் இருக்கேன்”
“மேடம் நீங்க வெளிய நில்லுங்க இப்ப அவங்களுக்கு செக் பண்ணனும் நர்ஸ் குழந்தையோட ஹார்ட் பீட் பாத்தீங்களா?”
” ஆமா மேடம் கொஞ்சம் ஹார்ட் பீட் குறைச்சிகிட்டே இருக்குது நம்ம ஆப்ரேஷன் பண்றது தான் நல்லதுன்னு தோணுது “
“ஆமாம் கொஞ்சம் மோசமா போகிற மாதிரி தான் இருக்கு ,மேடம் நீங்க பிரியாவுக்கு அண்ணி தானே?”
“ஆமா மேடம்”
“இல்ல குழந்தைக்கு ஹார்ட் பீட் குறைச்சிகிட்டே இருக்கு நம்ம நார்மலுக்கு எதிர்பார்க்கிறது கஷ்டம் தான் ஆப்ரேஷன் பண்றது நல்லது”
” அப்படியா அப்ப ஆபரேஷன் பண்ணிருங்க எங்களுக்கு ரெண்டு பேரும் முக்கியம் தான்”
” சரி மேடம் ஆபரேஷனா நீங்க வெளிய தான் நிக்கணும் வெளிய நின்னுக்கோங்க”
“அத்த வெளிய போகாத அம்மா பக்கத்துல நில்லு”
” செல்ல குட்டி நீ இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியே வந்துருவ பயப்படாத என்ன”
“வாழ்த்துக்கள் பிரியாவுக்கு ஆம்பள புள்ள பிறந்திருக்கு”
தான் அடைந்த தாய்மையை அவளும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய கணவனோ தாயோ அருகிலிருக்க வேண்டிய தருணத்தில் அவளை அருகில் வைத்தால் தாயுள்ளத்தோடு, தான் பெறாத பிள்ளையிடம் அது கருவிலிருக்கும் போது தாய் பாசத்தை பொழிகிறாள் அத்தையானவள்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: