ஒரு பக்க போட்டிக்கதை: சிறப்புப் பெற்றோர்கள்

by admin
79 views

எழுத்தாளர்: சுதா கணபதி

“டைம் ஆச்சு கிளம்பலாம்.” சுடிதாரில் ஒட்டிக்கொண்டிருந்த மணலைத் தட்டியபடியே சாரு நடக்கலானாள் . “நம்முடைய பிரெண்ட்ஷிப்பை  அடுத்த லெவலுக்கு கொண்டுபோக நினைக்கிறேன்.

எப்பவும் போல் நோ என்று சொல்லி என்னை நோக அடிக்காதே .நிதானமா யோசிச்சு அடுத்த வாரம் உன் முடிவைச் சொல்லு “ என்ற சித்தார்த்திடம் “

கல்யாணம் ,குழந்தை எல்லாம் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று . பிரசாத்   தான் என்  வாழ்க்கை  . உன் எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளாதே . உன்மேல் கோபமோ வருத்தமோ இல்லை நம்ம பிரண்ட்ஷிப்  எப்பவும் போல தொடரும் .”

குமார்,வீணா, சாரு ,பிரசாத் என்னும்  அழகான பூங்காவில்   புற்று நோய் என்னும் சூறாவளி  வீசி வீணாவை பலி வாங்கி  சின்னாபின்னம் ஆக்கிவிட்டது .மூன்றே வயதான டவுன்சிண்ட்ரோம் பாதிப்புள்ள தம்பி  பிரசாத்தை சாருதான்  தாயைப் போல பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்டாள் .காலையில் பல் துலக்குவதில் ஆரம்பித்து இரவு தூங்குவது வரை  அவன் தேவைகளை கவனித்துக் கொள்வது சாருதான் .

அக்கா  தம்பியிடையே பதினைந்து  வயது வித்தியாசம் என்பதும்  இந்தப் பாசப் பிணைப்புக்கு ஒரு காரணமோ தெரியவில்லை.

காலம் யாருக்கும் காத்திருப்பது இல்லை . குமார் பணி ஒய்வு , சாரு   வேலையில் சேருவது ,பிரசாத் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிக்கு போய் வருவது  என்று பல மாற்றங்கள் .  சாரு  வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் அவளோடுதான் இருப்பான் .முப்பது வயதை நெருங்கிவிட்ட சாருவை திருமணம் செய்து கொள்ள அப்பா எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சம்மதிக்கவில்லை .

உறவினர்கள் அறிவுரையும் பயனற்று  போயின .  பிரசாத்தை கவனிப்பராற்று விட்டு விட்டு எனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள மாட்டேன்  என்ற தீர்மானத்தில் சாரு உறுதியாக இருந்தாள் .

பழைய நினைவுகளை அசை போட்டபடி வீடு திரும்பிய சாருவை பிரசாத் கட்டிகொண்டான்.”ஹலோ கண்ணா .கொஞ்சம் லேட் ஆயிடுத்து .டின்னர் சாப்பிட்டாயா ? இப்போ வாஷ் பண்ணிண்டு வந்து உன்னை தூங்க வைக்கிறேன்.” சாரு மேல் காலைப் போட்டுக் கொண்டு தான் பிரசாத் தூங்குவான். அவனைத் தனியாக உன் ரூமில் படுத்துக் கொள்ள பழக்கு என்று குமார் பலமுறை சொல்லியும் பலன் இல்லை .

சாரு இல்லாவிட்டால் ஒரே ரகளைதான் .
இரண்டு நாள் தீவிர யோசனைக்குப்  பின் சித்து ஒரு தீர்மானத்திற்கு  வந்தான் . அவனுடைய பெற்றோர் கார் விபத்தில் அகாலமாக  இறந்து விட அவனுக்கு கார்டியனாக இருந்து   படிக்க வைத்து சொத்துக்களைப்  பராமரித்து வரும் அட்வகேட்  பெரியப்பா வீட்டுக்கு  போனான் .

பீடிகை போடாமல்  சாருவை  விரும்புவதையும் அவள் குடும்பம் பற்றிய   எல்லா விவரங்களையும் சொன்னான் . “ அவள் என்னை மனதார விரும்பினாலும் திருமணத்திற்குப் பிறகு   பிரசாத்தை நான்  ஒதுக்கி விடுவேன்” என்று பயந்து பிடிவாதமாக  கல்யாணத்தைத்  தவிர்க்கிறாள் “
பெரியப்பா “நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் .

நான் பிரசாத்தை  அவன் அப்பா சம்மதத்தோடு  முறைப்படி தத்து எடுக்க விரும்புகிறேன் .நீங்க சட்டப்படி அதற்கான ஏற்ப்படுகளைப்  பண்ணுங்க பிளீஸ் “.

“  உனக்கு சரியான வழி காட்டுவது ஏன் பொறுப்பு. நீ குமாரிடம் பேசி முறைப்படி  தத்து ஹோமம் செய்து  பிரசாத்தை உனக்கு சுவீகாரம் கொடுக்க சம்மதமா என்று விசாரித்து சொல்லு .

மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் “
அம்மா சாரு “இன்னைக்கு ஈவினிங் எனக்கு தெரிந்த மூணு பேர் டீக்கு நம்ம வீட்டுக்கு வராங்க .ஸ்நாக்ஸ் எல்லாம் கேட்டரிங்   மாமியிடம் சொல்லிவிட்டேன் .

நீ காபி மட்டும் ரெடி பண்ணு “
“யாருப்பா எனக்கு தெரியாத உங்க பிரண்ட்ஸ் ?”
“அது உனக்கு சர்ப்ரைஸ் “
“ ஏன் கல்யாண விஷயமா ஏதாவது  ஏற்பாடு பண்ணினா நான் பத்ரகாளி ஆகிவிடுவேன் “
“அம்மா உன்னை கஷ்டப் படுத்த எனக்கு மனசு வருமா “ தன் ரூமுக்குள் நழுவி விட்டார் மாலை சித்து தன்  பெரியப்பா பெரியாம்மவோடு வீட்டிற்குள் நுழைய குழம்பிய சாரு கோபத்தோடு  அப்பாவைப் பார்க்க சித்து சிரித்தபடி “சாரு தேவியே  சாந்தமாக இருங்கள்” என்று உள்ளே வந்தான் .

கடந்த மூன்று நாட்களில் குமாரின் சம்மதத்தோடு பிரசாத்தை சுவீகாரம் எடுக்கும் முடிவைச் செயலாக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான் . பெரியப்பா  விளக்கமாக சொல்ல சாரு பிரமித்துப் போய் நின்றாள் .

“நம்ம கல்யனாத்திற்கு  முன்னாலேயே பிரசாத் என் மகனாகி விடுவான் .

பின்னால் நீ நினைத்தாலும் அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது . இப்பவாவது முழு மனதோடு என்னைக் கல்யாணம் செய்துப்பியா ?”
நன்றிப் பெருக்கோடு கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய சித்துவின் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள் .

பிரசாத்தும் எல்லாம் புரிந்தது போல  சிரித்துக்கொண்டு  “ம்மா”  என்று சாருவைக் கட்டிகொண்டான் .
பெற்று எடுக்காமலே சிறப்புக் குழந்தை  பிரசாத்துக்கு தாயான சாருவும் தந்தையான சித்துவும் பாராட்டுக்குரிய   சிறப்புப்  பெற்றோர்கள்  .

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!