எழுத்தாளர்: குமரி உத்ரா
என் செல்லம்”..பூவை நீட்டினாள்.
“பாட்டி பூஜைக்கு கொஞ்சம் மல்லியும் துளசியும் எடுத்து வைங்க” காசு எடுக்க உள்ளே போனான் ராகவன்.
காவ்யாவை நெருங்கிய வேணி அவள் முகத்தையே பார்த்தாள்.
“பாட்டி நாளைக்கு வெள்ளை சாமந்தி கொண்டு வருவியா பாட்டி..?”
”என் கண்ணு.., உனக்கு இல்லாத பூவா.?” பாட்டி நாளைக்கு கொண்டு வர்றேன்”.கன்னத்தை தடவி முத்தமிட்டவள் …
பூக்கூடையை எடுத்தபடி நடந்தாள்.
“காவ்யா உள்ளே வாடி..,அதட்டலாய் கார்த்திகாவின் குரல் காதில் கேட்டது.
வேணியின் மனக்கண் முன் மகன் சுரேந்தர் முகம் வந்து போனது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில்.., இறந்துபோன செல்ல மகனின் கண்களை, காவ்யாவின் சின்ன முகத்தில் கண்ட போது., ஏதோ தன் மகனையே கண்டு விட்ட மகிழ்ச்சி..!!
மௌனமாய் அழுத அந்த தாயுள்ளம்…, நாளைக்கு சாமந்தி பூ வாங்கிடணும். நினைத்தபடி மெல்ல நடக்க ஆரம்பித்தது..!!
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: