எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 2: என் குழந்தைப் பருவத்தில் ஏன் வறுமை, ஏன் கஷ்டம்?” தொடர்ந்து “இதை தாளாத பசிக் கொடுமையால் கேட்கிறேன்”?
ஒரு பரிதவிக்கும் சாமான்ய மனிதன் ஆதித்யா. மனதில் ஏராளமான கேள்விகளுடன், அவன் ஒரு புனித மலையை அடைந்தான். குகையில் அமைதியாக ஒருவர் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தவர் முகம் கருணை நிறைந்திருந்தது.
கண்கள் திறக்கும் வரை காத்திருந்து “ஐயா… நீங்கள் யார்?” என்றான் மிகவும் தவிப்புடன் ஆதித்யா.
“நீ யார் என்று அறிய வந்தாயா? இல்லையெனில் நீ யாராக வந்தாய் என்பதை கேட்க வருகிறாயா?” என்றார் அந்த முனிவர் போல இருந்தவர்.
“என் மனதில் சில கேள்விகள் இறைவனிடம் கேட்க வேண்டுமன எழுகின்றன. அவற்றை தெளிவுபடுத்த தங்களால் முடியுமா? பதில்களைப் பெற்றால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வெளிச்சம் கிடைக்கும்.” என்றான் ஆதித்யா.
“கேள்… ஆனால் ஏன் இநத கேள்விகளை என்னிடம் கேட்கிறாய் என்ற காரணம் கூறு.” என்றார் அந்த முனிவர்.
“என் குழந்தைப் பருவத்தில் ஏன் வறுமை, ஏன் கஷ்டம்?” தொடர்ந்து “இதை தாளாத பசிக் கொடுமையால் கேட்கிறேன்”
என்று கேட்டான் ஆதித்யா.
“வறுமை என்பது உனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு. உண்மையான செல்வத்தை உணர, வாழ்வை அர்த்தமுள்ள பார்வையில் பார்க்க வைக்கும் தருணம் அது. ஒரு பக்கம் எடுப்பதை பறிப்பது போல தெரிந்தாலும், மறுபக்கம் உனக்குள் சாமர்த்தியத்தை, பொறுமையை விதைக்கும் ஓர் பயிற்சி . மரம் வறட்சியில் வளரும்போது தான் அதன் வேர்கள் ஆழமாகப் பரப்பப்படும். உன் மனதை பண்படுத்த ஏற்பட்டதே வறுமை” என்றார் முனிவர்
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.