எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நாட்கள் பறக்கின்றன. மாதங்கள் ஓடுகின்றன. வருடங்கள் நகர்கின்றன.
ஆம். நான் 15 வருடங்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தில் குடி இருந்தேன். என் பக்கத்து வீட்டில் ஒரு பெண் குழந்தை. வித்யாலட்சுமி என்று பெயர். என்னோடு ரொம்ப நெருக்கம்.
ஒரு முறை விவேகானந்தர் பற்றி பேச வித்யாவை கூட்டி கொண்டு போனேன். அவருக்கு பேனா பரிசு கிடைத்தது. அவர்கள் சென்னையை விட்டு திருச்சி ஸ்ரீ ரங்கம் போனார்கள். வித்யாவின் அண்ணன் கேசவன்.
இன்று வீட்டிற்கு வந்து வித்யா கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தார். சிறு வயதில் பார்த்தது. இப்போது தாடி, மீசை என பெரியவர் ஆகி விட்டார். வித்யாவிற்கு கல்யாணம் என்று சொன்னார். அப்போது தான் எத்தனை வருடங்கள் சென்று விட்டது என்று தெரிய வந்தது.
வித்யா உறவினர் ஒருவரை காதலித்து அவரேயே கல்யாணம் செய்ய முடிவு எடுத்தார். இரு வீட்டாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. வித்யாலட்சுமி கொடுத்து வைத்தவர்.
அவர் காதல் சிறப்பு. அவர் மிக வெகுளி…! நிச்சயமாக நான் அவர் கல்யாணத்திற்கு செல்வேன். காலம் ஓடுவது விசித்திரமாக இருந்தது.
இன்று வித்யா திருமணம்… ஸ்ரீ ரங்கத்தில்..
நான் நேற்று ரிஷப்ஷனுக்கே வந்து விட்டேன்.
என் மனம் பூரிப்பு அடைந்தது…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.