காதல் பேசும் பிப்ரவரி: பிப்ரவரி 14

by admin 2
35 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

இன்று காதலர் தினம். காதலியுடன் கொண்டாட வேண்டும். காலை சீக்கிரமே எழுத்து விட்டேன். புதிய ட்ரஸ்.  டிஃப்பன் சாப்பிட்டு விட்டு அண்ணா சாலை கிளம்பினேன. அங்கு தான் என் காதலி வேலை செய்யும் இடம். 

நான் வடபழனியில் ஒரு ரோஜா பூங்கொத்து வாங்கினேன். அங்கு இருந்த மேனகா கார்ட்ஸ் கடையில் சிவப்பு நிறத்தில் இரண்டு இதயங்கள் இணைந்த மாதிரி ஒரு கார்ட். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. பக்கத்தில் உள்ள கடையில் பெண்கள் வைத்து கொள்ளும் பர்ஸ் வாங்கினேன். அவளுக்கு நிச்சயமாக பிடிக்கும். ரோஜா பூங்கொத்து, வாழ்த்து அட்டை மற்றும் பர்ஸ் எடுத்து கொண்டு பஸ்சில் அண்ணா சாலை கிளம்பி சென்றேன். 

என் இதயம் லப்-டப் என துடித்தது. இது தான் எங்களுக்கு முதல் காதலர் தினம்.  நான் பஸ்சில் இருந்து இறங்கி அவள் ஆபிசுக்கு சென்றேன். 

பாதிவழியில் அவள் நேரே வந்தாள். நான் கை குலுக்கினேன். அவளுக்கு ரோஜா பூங்கொத்து, வாழ்த்து அட்டை மற்றும் பர்ஸ் பரிசு அளித்தேன். அவள் இன்பத்தின் உச்சிக்கே போனாள். 

அவள் நடு ரோட்டில் என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். 

           இச்… இச்…! 

சட் என்று எழுந்தேன். ஆம். நான் படுக்கையில் இருந்தேன். எல்லாம் கனவு. 

அம்மா…!  நான் தேதி காலண்டர் பார்த்தேன். 

               பிப்ரவரி 15…? 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!