எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
சிலருக்கு நான் என்ன செய்தாலும் அது தப்பாகவே இருக்கும். அது தான் என் தலையெழுத்து. நான் தவறு செய்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு விடுவேன். அது போல பிறர் செயலையும் ” மன்னிப்போம்… மறப்போம்…! ” என்றே எடுத்துக் கொள்வேன்.
பிரச்சனை என்ன என்றால் என் காதலி புவனா என்னை தவறாக நினைத்து விட்டார். நான் நேற்று 2 மணி நேரம் என் கிளாஸ் மெட் ரஞ்சனியிடம் பேசினேன். பேசினேன் என்று சொல்வதை விட அவர் அவரது பிரச்சினையை எனக்கு தெரிவித்தார்.
அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று அழுது கொண்டே சொன்னார். ஆம். அவர் கல்லூரியில் சுந்தரம் என்பவரை காதலித்து வந்தார். நான் அவருக்கு தைரியம் ஊட்டினேன். நீங்கள் மேஜர்… நீங்கள் விரும்பியவரை கல்யாணம் செய்து கொள்ள முழு உரிமை உள்ளது என்றேன்.
இது தான் நடந்தது. இதை புவனா கவனித்தார். இரண்டு மணி நேரம் பேச என்ன இருக்கிறது…? என்பதே புவனாவின் கேள்வி. புவனாவிடம் நடந்ததை சொன்ன பிறகே சமாதானம் அடைந்தார்.
நான் உண்மையில் அவருக்கு புரிய வைக்க மிகவும் சிரமம் பட்டேன். கடைசியாக நான் சத்தியம் செய்த பின்னே… புவனா சந்தோஷம் அடைந்தார்.
தவறு செய்யாதவன் மனிதன் இல்லை. ஆனால்.. தனது தவறை திருத்தி கொள்பவனே சிறந்த மனிதர்…!
புவனா சந்தோஷம் அடைந்தார்….!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.