எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
ஊட்டி. அரசு கலை கல்லூரி. மலை மேல் இருந்தது. சுற்றி பெரிய பெரிய மரங்கள். ரம்மியமான சூழ்நிலை. பெரிய மைதானம்.
கல்லூரி கட்டிடங்கள் அருகில் பல இடங்களில் பச்சை புல்வெளி. படங்களில் பார்த்து இருக்கலாம். காதல் செய்பவர்கள் அங்கங்கே தங்கள் இடத்தை ஏற்படுத்தி கொள்வார்கள். கல்லூரி காதலர்கள் அதிகம்.
எனக்கும் ஒரு காதலி. ஒரு நாள் சையனஸ் ப்ளாக் பின்புறம் உட்கார்ந்தோம். அவள் பெயர் அஜீதா. நாங்கள் உல்லாசமாக இருந்தும். முத்தங்களை பறிமாறி கொண்டோம். இருவரும் சிறிது நேரம் தன்னிலை மறந்து இருந்தோம்.
அவள் திடிரென ஒன்று சொன்னார். ஆம். நான் சிகரெட்டை அடியோடு விட வேண்டும் என்று வற்புறுத்தி சொன்னார். இது ஒரு பிரச்சினை அல்ல என்றே நினைக்கிறேன்.
” என்னால் முடியாது…! ” என்று சொன்னேன். அவளுக்கு கோபம் வந்தது. ஏன் என்று கேட்டார்.
” சிகரெட் தான் என் முதல் காதலி…! ” என்று சொன்னேன் ” என்னை விடவா சிகரெட் முக்கியம்…? ” என்றார் அஜீதா.
” பாரு..! அஜீதா…!! என்னால் சிகரெட்டை அடியோடு விட முடியாது. ஆதனால் தான் அதை என் முதல் காதலி என்றேன்… இதை ஏன் பெரிது பண்ணுகிறாய்…? “
” நோ… நோ… நீ சிகரெட்டை விட்டு விட்டு வா… அதற்கு பிறகு தான் நான் உன்னை சந்திப்பேன்… இது சத்தியம்..! “
” ஏய்….. இது ரொம்ப மோசம்…!”.
” நான் சொன்னால் சொன்னது தான்…. பை…! “.
காதல் முறிந்தது.
காரணம்…
என் முதல் காதலி…!
பி. கு : என்னால் முதல் காதலியை விட முடியவில்லை இப்போதும்…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.