காதல் பேசும் பிப்ரவரி: மெளனக் காதல்

by admin 2
42 views

எழுதியவர்: நா. பத்மாவதி

கணேஷ் பீரோவில் உள்ளத் துணிகளை அடுக்கும் போது அவனின் பழையக் கவிதைகள் அடங்கிய குறிப்பேட்டை புரட்டிப் பார்க்க அவன் நினைவுகள் பின்னோக்கிப் பதின் பருவத்திற்குச் சென்றன.

அவன் வீட்டில் குடியிருந்த நான்கு குடித்தனத்தில் ஒன்றில் அவளும், அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எனக் குடும்பமாகக் குடியிருந்தனர்.

அவள் பெயர் ரோஜா, பெயருக்கேற்ற நிறமிக்க அமைதியான வசீகரமான முகமுடைய அழகியவள். அவளைப் பார்த்த உடன் கணேஷ்க்கு மிகவும் பிடித்தது. கணேஷ் கவிதை எழுதுவது, சினிமா பாடல்கள் பாடுவது என பன்முகத் திறமைக் கொண்டவன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

நாட்கள் செல்ல செல்ல, இவன் பாடுவது அவளுக்கும் பிடித்து இருக்கிறது என்பதை பிறர் சொல்ல அறிந்தான். எல்லோரிடமும் நன்றாக பேசுபவன் அவளிடம் மட்டும் பேசத் தயக்கமாக உணர்ந்தான். அவளுக்கும் அதே நிலை தான். இருவரும் நேருக்கு நேர் பார்க்காது, பேசாது ஆனால் மனசுக்குள் மெளனக் காதல் புரிந்தனர்.

ஒருநாள் சில காதல் கவிதைகளில் தன் மன உணர்வுகளைக் கவிதைகளாக எழுதி அவளிடம் “இதைப் படிச்சுட்டு கொடு” என அவளிடம் கொடுத்து அவளதுப் பதிலுக்காகக் காத்திருந்தான். ஒருவாரம் கழித்து அவன் எழுதியவற்றைத் திருப்பிக் கொடுத்தாள். அவன் என்ன பதில் எழுதி இருப்பாள் என ஆவலும் பரபரப்பாகத் திறக்கக் கடைசிப் பக்கத்தில் ” நீங்கள் எழுதியக் கவிதைகள் அனைத்தும் மிக அருமை. இதுபோல் இன்னும் நிறைய எழுதி உச்சம் தொட வாழ்த்துகள். இப்படிக்கு ரோஜா” என்று கையெழுத்துப் போட்டிருந்தாள். அதை இன்றும் நினைக்க,  இறுதிவரை பேசாது மெளனத்திலேயே முடிந்தது என் காதல் என எண்ணிப் பெருமூச்சு விட்டான் கணேஷ்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!