நௌஷாத் கான் .லி
டாக்டர் என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க ,நான் செஞ்ச காரியத்தை நினைச்சாலே எனக்கு அசிங்கமாகவும் ,அருவெறுப்பாகவும் இருக்கிது ஒவ்வொரு நாளும் நரக வேதனையா இருக்கிது .ஒரு தூக்கம் கூட நிம்மதியா வர மாட்டேங்குது .
இந்த வாழ்க்கை ரொம்ப கொடூரமா ,ரணமா தெரியுது நான் ரொம்ப கெட்டவனா மாறிட்டேன் மனசு முழுதும் கசடு நிறைஞ்சு போச்சு டாக்டர் .
ப்ளீஸ் என்னை கொன்னுடுங்க ,ப்ளீஸ் என்னை கொன்னுடுங்க
வாழணும்னு நினைச்சா கூட பல பேருக்கு இந்த வாழ்க்கை கிடைக்காது உனக்கு கடவுள் இந்த வாழ்க்கையை அற்புதமா கொடுத்து இருக்கான் நீ என்ன தான் தப்பு செஞ்சு இருந்தாலும் அதை சரி செஞ்சுக்கிட்டு நல்லவனா வாழ பாரு .மனசை ஒரு நிலை படுத்து ,தப்பான விஷயத்தை பத்தி நினைச்சு கூட பார்க்காதே ,கடவுளை மனதார நினை ,நல்ல நட்போடு பழகு ,உண்மையாய் காதல் செய் நிச்சயம் உன் வாழ்க்கை நல்லபடியாய் அமையும் என்றார் மனநல மருத்துவர் மைதீன்
சொல்லுப்பா உனக்கு என்ன பிரச்சனை ,கண்டிப்பா நான் தீர்த்து வைக்குறேன்.
நான் பதினாறு வயசா இருக்கும் போதே அப்பா ,அம்மா ஒரு விபத்துல இறந்துட்டாங்க ஒரு பெரிய அண்ணன் இருந்த போதும் அவர் என்னை கவனிக்கலை நானே ஒரு கடைல பார்ட் டைம் வேலை பார்த்து எப்படியோ பன்னிரண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சேன் அதன் பிறகு கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சேன் எனக்கு அன்பு காட்டவோ ,அக்கறை செய்யவோ யாருமில்லை எனக்கு இருபது வயசு இருக்கும் போது அந்த மல்டி நேஷனல் சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ்மேனா வேலை கிடைச்சது அதுவும் கார்மெண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் லேடிஸ் அண்டர் கார்மெண்ட்ஸ் டிவிஷனில் வேலை கிடைத்தது .
எப்போது பார்த்தாலும் பெண்களின் பிரா -பேண்டீஸ்க்கு தான் பிரைஸ் லேபிள் ஒட்டி டிஸ்பிலே செய்ய வேண்டும் .ஒரு சில பெண் வாடிக்கையாளர்களும் அவங்களுடைய அளவை என்கிட்டே சொல்லி பிரா -பேண்டீஸ் வாங்கிட்டு போவாங்க .
ஒரு காலத்துல என் மனசு நல்லா தான் இருந்தது ஆனா வயசு ஆக ,ஆக என் எண்ணங்கள் ரொம்ப மோசமா போய்க்கிட்டு இருக்கிறதை உணர முடியுது டாக்டர் .தூக்கத்துல கூட பெண்களின் உள்ளாடைகள் தான் கனவா வருது .நான் சாப்பிடுற இட்லியில் இருந்து வானத்துல பார்க்கிற நிலா வரைக்கும் எல்லாமே பெண்களின் மார்பகங்களாகவும் ,பிராவாகவும் தான் தெரியுது டாக்டர் .
அவ்வளவு ஏன் டாக்டர் என்னால ஒரு ஆப்பிளை கூட கூட நிம்மதியா சாப்பிட முடியலை ,எப்ப பார்த்தாலும் ,எதை பார்த்தாலும் பெண்களின் உள்ளாடையும் ,மார்பகங்களும் தான் நினைவுக்கு வருது .
ஒரு நல்ல தாய்க்கு மகனா பொறந்தவன் ,இப்படி காஜி பிடிச்சு தப்பா இருக்கிறதை நினைக்குறப்ப என்னை எனக்கே பிடிக்கலை டாக்டர் .
இந்த வேலையை விட்டிடலாம்னு மனசுக்கு தோணுது ஆனா இந்த வேலையை விட்டிட்டா நான் ரொம்ப கஷ்டப்படுவேன் ஏன்னா ஓரளவுக்கு நல்ல சம்பளம் ,ஏசியில வேலை ,வர்றது எல்லாம் பிரச்சனை தராத ஓரளவுக்கு வசதியான வாடிக்கையாளர்கள் இப்படி பட்ட நிறுவனத்தை விட்டிட்டு போனா சோத்துக்கே கஷ்டப்படுவேன்னு புத்தி சொல்லுது டாக்டர் .கூட வேலை பார்க்குற மற்ற சக ஆண் தோழர்கள் என்னை எல்லாரும் பிரா -மணின்னு அடைமொழி வச்சு கூப்பிட்டாலும் கோபப்பட மாட்டேன் வெளியே மௌனமா இருந்தாலும் உள்ளுக்குள்ள சந்தோசம் தான் படுறேன் எனக்கு கிடைச்ச மாதிரி அவன்களுக்கு இந்த லேடீஸ் அண்டர் கார்மெண்ட்ஸ் பிரிவு கிடைக்கலை அதான் பொறாமைல சொல்றாங்கன்னு நானும் கடந்து போயிடுவேன் .
எத்தனையோ விஷயங்களை இந்த பாழாய் போன மனசு நினைச்சாலும் மன்னிக்கவே முடியாத ஒரு தப்பை என்னையும் அறியாம செஞ்சேன் டாக்டர் அந்த விசயத்துக்கு அப்புறம் தான் எனக்கு வாழவே பிடிக்கலை
என்னப்பா சொல்லுற ??
ஆமாம் டாக்டர் மன்னிக்கவே முடியாத தப்பை தான் செஞ்சேன் என்னை உயிரா நினைச்ச பொண்ணுக்கிட்ட மனசை பார்க்காம அவ மாரை பார்க்க நினைச்ச பாவி பாவி டாக்டர் .பொண்ணுங்க மாராப்புக்கு பின்னாடி ஒரு மனசு இருக்குன்னு புரியாம அந்த தப்பை பண்ணிட்டேன் .
என்னை உயிர்க்குயிரா என் சைந்தவி காதலிச்சா ,நானும் உண்மையா தான் காதலிச்சேன் என் பொறந்தநாளுக்கு என் ரூமுக்கு வந்தவகிட்ட எப்படி தப்பா நடந்துக்க மனசு வந்தது ?
அவ எதிர்பார்க்காத சமயத்துல அவ துப்பட்டா விலக்கி அவ மார்பகங்களை பார்த்தேன் அன்றைக்கு என் கன்னத்துல அடிச்சிட்டு போனவ தான் அதுக்கப்புறம் என்னை பார்க்க வரவே இல்லை .எத்தனையோ முறை அவளுக்கு போன் செய்தும் என் போனை எடுக்கவே இல்லை .
இந்த பாழாய் போன தப்பான வயசும் ,இந்த கெட்ட புத்தியும் தான் என்னையும் அறியாம அந்த தப்பை செய்ய வச்சது .
நான் பாவி டாக்டர் ,பாவி மகா பாவி .எந்த கடவுள் சன்னதியில போய் வேண்டினாலும் எந்த கடவுளும் என்னை மன்னிக்க மாட்டார் அதனால என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க
இங்க பாருங்க மணி எவ ஒருத்தன் தப்பை உணர்ந்து ஒழுங்கா இருக்க நினைக்கிறானோ அப்பவே அவன் மனுஷனாகிடுறான் .தினமும் மனதார கடவுள்கிட்ட வேண்டுங்க ,வேலை நேரம் போக நல்ல விசயத்துல கவனம் செலுத்துங்க ,உங்க காதலிக்கிட்ட உண்மையை சொல்லி மன்னிப்பு கேளுங்க ,உங்க திருப்திக்காக தூக்கத்துக்காக வேணா மாத்திரை எழுதி தரேன் ,தினமும் நல்லா தூக்கம் வரும் ,நல்ல தூக்கம் கிடைத்தாலே மனசு தெளிவாகும் .எப்போதுமே மனதை தைரியமாய் வைத்து கொள்ளுங்கள் ,நம்பிக்கையோடு ,நல்லெண்ணத்தோடு வாழுங்கள் எல்லாமும் சரியாகும் என்று நம்பிக்கை அளித்து மணியை அனுப்பி வைத்தார் டாக்டர் மைதீன் .
சில தினங்களுக்கு பிறகு
ப்ளீஸ் சைந்தவி ஒரு நிமிஷம் நில்லுங்க ,எத்தனையோ முறை போன் செய்தும் நீங்க போனை எடுக்கலை நான் செஞ்சது ரொம்ப தப்பு தான் ஆனா பேசாம மட்டும் இருந்திடாதீங்க .என் அம்மா அப்பாவுக்கும் அப்புறம் என் மேல அன்பு காட்ட யாருமே இல்லை உன்னை மட்டும் தான் என் உயிரா ,உறவா நினைச்சேன் ஆனா என்னையும் அறியாம உன்கிட்ட அன்றைக்கு அப்படி தப்பா நடந்துக்கிட்டேன் என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்
நீ சரின்னு சொன்னா முறைப்படி உங்க வீட்ல வந்து பேசி உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன் நீ என்ன சொல்லுற சைந்தவி ??
உன் மேல எனக்கு கோபம் தான் ஆனா இத்தனை நாளா நான் ஏன் பேசலை தெரியுமா ??
எனக்குள்ள எத்தனையோ சோகங்கள் இருந்தும் ,உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் உன் பொறந்தநாளைக்கு சொல்ல உன்கிட்ட வந்தேன் .அன்றைக்கு தான் நீ அப்படி செய்யவும் அந்த விஷயத்தை சொல்லாம என் மன வலிகளோ திரும்பி போயிட்டேன்
சொல்லு சைந்தவி கண்டிப்பா உனக்கு ஆதரவா ,ஆறுதலா காலம் முழுதும் நானிருப்பேன்
நான் உனக்கு செட்டாக மாட்டேன் மணி
ஏன் மா அப்படி சொல்லுறே ?
கல்யாணத்துக்கு அப்புறம் நான் உனக்கானவ தான் ,அன்றைக்கு நீ செஞ்ச விஷயத்தை கல்யாணத்துக்கு அப்புறம் என் விருப்பத்தோட செஞ்சிருந்தா அது தப்பில்லை தான் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நூறு சதவிகித தாம்பத்ய சுகத்தை என்னால தர முடியாதுடா ஏன்னா மார்பக புற்றுநோயால் என்னுடைய இரண்டு மார்பகத்தையும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் ஆப்ரேஷன் பண்ணி எடுத்தாங்க எனக்கு மார்பக புற்றுநோய் இருக்குன்னு தெரிஞ்சவுடனே உனக்கு சொல்லலாம்னு வந்த அன்றைக்கு தான் நீ அப்படி நடந்துக்கிட்ட ??
நான் ஒரு நல்ல மனைவியாய் உனக்கு மனசால இருந்தாலும் ,உடம்பால இருக்க முடியாதுடா ,என்னை மன்னிச்சிடுடா நீ வேறு யாரையாவது கட்டிக்கிட்டு நல்லா இரு என்றாள் சைந்தவி
அவளை கட்டிக்கொண்டு சாரிடி என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டான் மணி .
இப்போது மணி -சைந்தவி தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .
ஏண்டி அறிவுகெட்டவளே பொம்பள குழந்தை வெளிக்கி போனா நீ தானடி கழுவி விடணும் உன் புருஷனை கழுவி விட சொல்லுறியே ,ஆம்பளை செய்யுறது நல்லாவா இருக்கு என சத்தம் போட்டாள் சைந்தவி தாய் .
ஒரு நல்ல கணவனாய் ,ரெண்டு பெண் குழந்தைகளுக்கு தாயுள்ளம் கொண்ட தகப்பனாய் எந்த கெட்ட எண்ணங்களின்றி தூய உள்ளத்தோடு வாழ்ந்து வருகிறான் மணி .
காமத்தை மிஞ்சும் சக்தி தூய காதலுக்கும், பாச உறவுகளுக்கும் உண்டு !!
முற்றும்.