எழுத்தாளர்: ரியா ராம்
அடியேய் எந்திரிடி இன்னும் என்ன உனக்கு தூக்கம் இதே மாதிரி நாளைக்கு அங்க போய் தூங்கிறாத உன்ன மட்டுமில்லாம என்னையும் சேர்த்து தான் திட்டுவாங்க, என்று அமுதா கத்தி கொண்டிருந்தார் தன் மகளிடம்.
அவளோ ஏதோ தாலாட்டு கேட்பது போல் உறங்கி கொண்டிருந்தாள்.
அவள் தான் இலக்கியா அந்த தமிழின் மேல் கொண்ட காதலால் அதையே தன் கல்லூரி பாடமாக எடுத்து அதில் பட்ட படிப்பை முடித்து விட்டு ஒரு பள்ளியில் தமிழாசிரியையாக இருக்கிறாள்.
அவள் அழகை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்படி ஒன்றை பற்றி அவளே கவலை பட மாட்டாள் அது நமக்கு எதற்க்கு ஆனால் அவளவனுக்கு அவள் மட்டுமே அழகு. அவளுக்கும் அவன் மட்டுமே அழகு.
விடிந்தால் திருமணம் அதனால் தான் அவள் தாய் அவளை திட்டி எழுப்பி கொண்டு உள்ளார் ஆனால் அது அவள் காதில் தான் விழ வில்லை
அவள் அதிகம் ஆசை பட்ட வாழ்க்கை அதுவும் கிடைக்காது என நினைத்த வாழ்க்கை இப்போது அவளுக்கு கிடைத்து உள்ளது .
அமுதாவின் போராட்டத்தில் ஒரு வழியாக எழுந்த இலக்கியா எழுந்து சென்று கிளம்பினாள் .
அப்படியே சொந்தம் பந்தங்களுடன் அந்த நாள் முடிய மறுநாள் அழகாய் விடிந்து அவள் விரும்பிய மன்னவனுடன் அவளுக்கு மணம் முடிந்தது.
எல்லாம் முடிய அந்த ஜோடி தனித்து விடப்பட்டது .
இலக்கியா அவன் அறையில் அவனுக்காக காத்து கொண்டு இருந்தாள் இது அவள் எதிர்பார்த்து ஏங்கிய வாழ்க்கை என்பதால் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவங்களை நினைத்து பார்த்து கொண்டிருந்தாள்.
இலக்கியா வேகமாக வேலைக்கு கிளம்பி தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது தன் கண்களில் கருப்பு கண்ணாடி அணிந்து சாலையை கடப்பதற்க்காக ரொம்ப நேரமாக நின்று கொண்டிருந்தான் . அவனை கவனித்தவள் தன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அவனை நோக்கி சென்றாள்.
இலக்கியா, சார் நான் உங்களுக்கு உதவி செய்யவா அந்த பக்கம் போக என
திடிரென தன் பக்கத்தில் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பிய அந்த இளைஞன் திரும்பி பார்க்க
அவன் பார்வையில் தான் பேசியது அவனுக்கு புரியவில்லை என நினைத்தவள்
இலக்கியா, சார் நான் இலக்கியா நான் இங்க பக்கத்துல இருக்க பள்ளிக்கூடத்துல தான் வேலை பாக்குறேன் நான் இந்த வழியா போகும் போது பார்த்தேன் நீங்க ரொம்ப நேரமா இந்த ரோட்டை கிராஸ் பண்ண டிரை பண்ணிட்டு இருக்குறத அதான் என்னால முடிஞ்ச உதவிய செய்ய வந்தேன் என
அந்த இளைஞன் அவளிடம் , ஹாய் இலக்கியா நான் செழியன் எனக்கு கண் நல்லாவே தெரியும் என அவன் ஏதோ கூற வர…..
அதற்க்குள் இடையிட்ட இலக்கியா, அய்யோ மிஸ்டர் செழியன் உங்களுக்கு கண் நல்லாவே தெரியும் அப்படிங்கிறது எனக்கு நல்லாவே தெரியும் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்ததுக்கு காரணம், உங்கள நான் தினமும் இங்க பார்ப்பேன் அப்ப உங்க கையில ஒரு ஸ்டிக் இருக்கும் இன்னிக்கு அது இல்ல அதான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்.
அது கூட உங்க மேல பரிதாபப்பட்டு கிடையாது நீங்க ஸ்டிக் இல்லாம தான இங்க நின்னுட்டு இருக்கீங்க அதான் நான் உங்கள அந்த பக்கம் விட்டுட்டா நீங்க சீக்கிரமாக போயிடுவீங்க இல்ல அதான்
செழியன், எம்மா பரம தேவதை நான் உன்ன என்ன கேட்டா நீ என்ன இப்படி அடிக்கி கிட்டே போற என்னோட ஸ்டிக் இப்ப வரும் போது ஒரு பைக் இடிக்க வந்ததுல சாக்கடையில விழுந்துடுச்சி நான் என்னோட நண்பன் கிட்ட சொல்லி இருக்கேன் அவன் வேற ஸ்டிக் கொண்டு வாரேன் சொன்னான் அதான் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
அவன் பேசும் போது இடையிட்ட இலக்கியா உங்களால ஸ்டிக் இல்லாம நடக்க முடியாதா சாரி நான் உங்கள கஷ்டப்படுத்தனும் அப்படின்னு கேட்கல என்னால உங்களுக்கு ஏதாவது உதவ முடியுமா அப்படிங்கிறதுக்கு தான் கேட்டேன் சாரி எதுவும் தப்பா இருந்தா என
அவளை பார்த்து மெலிதாக சிரித்த செழியன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல இலக்கியா, ‘இலக்கியா’ அப்படி கூப்பிடலாம் இல்ல,
அவள் ஆமோதிப்பாக தலை அசைக்கவும் அவன் தொடர்ந்தான்.
செழியன், இலக்கியா எனக்கு ஸ்டிக் இல்லாமலும் நடப்பேன் ஆனா கால் கொஞ்சம் வலி எடுக்கும் அதனால என்னோட பிரண்ட்ஸ் என்னை ஸ்டிக் இல்லாம நடக்க விடமாட்டாங்க அதான் இங்க இப்ப நின்னுட்டு இருக்கேன் நான் உங்கள அவ்வளவா பார்த்தது இல்ல நீங்க என்ன ரொம்ப நல்லா தெரிஞ்ச மாதிரி பேசிட்டு இருக்கீங்க என்ன விஷயம் தெரிஞ்சுக்கலாமா ஏன்னா இது உதவி மட்டு செய்ய வந்தது மாதிரி எனக்கு தெரியல என
அவன் கேள்வியில் சிறிது தடுமாறிய இலக்கியா அவனிடம் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ஒரு அரை மணி நேரம் கிடைக்குமா
செழியன், மேடம் அப்படி என்ன பேச போறிங்க உங்கள எனக்கு இன்னிக்கு தான் தெரியும் அதான் கேட்குறேன்.
இலக்கியா, நீங்க சொல்லுங்க நான் பேசுறேன் என அவள் ஒரே நிலையாக இருக்க
செழியன் , சரி இப்ப என்னோட பிரண்ட் வந்துடுவான் எனக்கு இப்ப எந்த வேலையும் இல்ல ஆனா உங்களுக்கு இருக்கும் இல்ல அதனால நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு சொல்லுங்க நாம மீட் பண்ணலாம்.
இலக்கியா, ஐய்யோ என்னங்க நீங்க இப்படி சொல்றீங்க நீங்க ஒரு ஐஞ்சு நிமிசம் டைம் குடுங்க இதோ வந்துடுறேன் எங்க போய் பேசலாம் அப்படின்னு நீங்களே சொல்லுங்க சரியா இதோ வாரேன் என்றவள் தன் போனை எடுத்து கொண்டு தள்ளி சென்றாள் .
அவள் செல்வதை பார்த்தவன் மனதிற்க்குள் செழியா இன்னிக்கு இவ கிட்ட நீ சரியா மாட்டி கிட்ட எப்படியாவது சமாளி என்று தனக்கு தானே சொன்னவன் தன் நண்பனுக்கும் சில பல திட்டுக்களை வழங்கி கொண்டான் .
அப்போது சரியாக அவன் நண்பன் அருண் வர அவனிடம் தன் ஸ்டிக் வாங்கி அவன் உடன் வர சொல்லியதுக்கும் எதுவும் பதில் சொல்லாமல் அவனை முதலில் அங்கிருந்து அனுப்பி விட்டான் .
அவனும் செழியன் பார்வை ஏதோ ஒரு பெண்ணிடம் இருப்பதை பார்த்து விட்டு வீட்டிற்க்கு வந்த பின்பு பேசிக்கொள்வோம் என நினைத்து அமைதியாக கிளம்பி விட்டான்.
இங்கு இலக்கியா தன் போனில் இருந்து தனது ஒரே தோழியான ஆர்த்திக்கு போன் செய்து இன்று தனக்கு பள்ளியில் விடுமுறை கூறுமாறு சொல்லி விட்டு அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் போனை கட் பண்ணிவிட்டு செழியனிடம் வந்தாள் .
அந்த பக்கம் இருந்த ஆர்த்தி இந்த எருமைக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு காலையில நல்லா தூங்கிட்டு இருந்தவள சீக்கிரமா கிளம்பி ஸ்கூலுக்கு வர சொன்னா சரின்னு நான் வந்து இவளுக்காக காத்திருந்தா இவ என்ன டான்னா அவளுக்கு லீவ் சொல்லிட்டு போனை வச்சிட்டா சரி எப்படி இருந்தாலும் இங்க தான வரணும் அப்ப பார்த்துக்கிடுவோம் என நினைத்து விட்டு அவள் தனது வேலையை கவனிக்க சென்றாள் .
போன் பேசிவிட்டு செழியனிடம் வந்த இலக்கியா அவனையும் அழைத்து கொண்டு அருகில் இருந்த பார்க் உள்ளே சென்றாள்.
அவனும் அவளிடம் எதுவும் கேட்க வில்லை அவள் உடன் சென்றான் . அங்கு ஒரு இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.
முதலில் இலக்கியா தான் ஆரம்பித்தாள்
இலக்கியா, இங்க பாருங்க செழியன் நான் பேசி முடிக்கிற வரை நீங்க எதுவும் பேசாதீங்க நான் பேசி முடிச்ச உடனே எதுனாலும் சொல்லுங்க ஓகே வா என்றாள் கேள்வியாக அவனும் சரி என்க அவள் ஆரம்பித்தாள்.
“நான் உங்கள முதன் முதலா இந்த ரோட்டுல தான் பார்த்தேன் சத்தியமா சொல்லுறேன் அப்பவே உங்க கிட்ட விழுந்துட்டேன் ஆமா கண்ட உடன் காதல் தான் நீங்க சொன்ன மாதிரி உங்க குறை என் கண்ணுக்கு தெரியல அது கூட உங்களுக்கு தனி அழகு தான் நீங்க இந்த ஸ்டிக் வச்சு நடக்கும் போது அவ்வளவு அழகா இருப்பீங்க அன்னிக்கே நான் உங்க பின்னாடி வந்து உங்கள பத்தி தெரிஞ்சு கிட்டேன் “
” நீங்க ஆஸ்ரமத்துல வளர்ந்தது இப்ப தனியா பிரண்டு கூட தங்கி இருக்கிறது எல்லாம் தெரியும் அது கூட உங்களுக்கு காதல் மேல நம்பிக்கை இல்லைன்னும் தெரியும் ,இருந்தாலும் என்ன செய்ய நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது”
உடனே என்னோட அப்பா அம்மா கிட்ட சொன்னேன் அவங்க தன்னோட மருமகன பார்க்கணும்னு சொன்னாங்க அதான் இன்னிக்கு உங்கள கையோட கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன் பிளிஸ் என்ன உங்க வாழ்க்கை முழுக்க வர அனுமதி தாங்களேன், என்றவள் அவன் அருகில் கீழே முட்டி போட்டு அமர்ந்து தன் பேக்கில் இருந்து ஒரு மோதிரம் எடுத்து நீட்டினாள் .
அவள் பேசும் போதே அதிர்ச்சியாக இருந்தவன் அவள் தன் முன் முடி போட்டு அமர்ந்து மோதிரம் எடுத்து நீட்டவும் அவளிடம் பேச ஆரம்பித்தான்
செழியன், லக்கி எனக்கு இப்ப வர கல்யாணம் பண்ணணும் அப்படின்னு ஆசை இருந்தது கிடையாது ஏன்னா எனக்குன்னு யாருமே கிடையாது ஆனா உன்ன நான் தினமும் பார்ப்பேன் நீ என்ன பார்க்குற பார்வையிலேயே நீ என்ன விரும்புறது எனக்கு தெரிஞ்சது ஆனா நான் என்னோட நிலைமையில இருந்து யோசிச்சு இன்னிக்கு உன் கிட்ட பேசி என்னை மறக்க சொல்லணும் அப்படின்னு நினைச்சு தான் உன் கூட வந்தேன் ஆனா நீ இப்ப பேசுனதுலயே என் மேல நீ வச்சிருக்க காதலோட அளவ உணர்ந்துட்டேன் உன் மூலமா எனக்கு ஒரு குடும்பம் கிடைக்க போகுறத நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம எப்ப கல்யாணம் பண்ணலாம்னு சொல்லு என அவன் பேசி முடிக்க
அவனையே அதிர்ச்சி விலகாமல் இலக்கியா பார்த்து கொண்டிருந்தாள். அவள் மட்டுமல்ல அவளது பெற்றோர் , செழியனின் நண்பன் என மூவருமே காரணம் இலக்கியா காலையிலேயே அவள் செழியன் நண்பனிடம் அவளின் அப்பா,அம்மாவிடம் சொல்லி இருந்ததால் அவர்களும் செழியன் என்ன முடிவு எடுப்பான் என தெரிந்து கொள்வதற்க்காக அங்கு வந்து இருந்தனர்.
அவள் அதிர்ச்சியாக தன்னை பார்ப்பதை பார்த்த செழியன் அவளிடம் பேச ஆரம்பித்தான்
என்ன நான் நீ சொல்லுறதுக்கு ஒத்துக்க மாட்டேன் நீ எப்படி என்ன சம்மதிக்க வைக்க அப்படின்னு யோசிச்சு வச்சிருந்தியா கவலைப்படாத உனக்கு அந்த வேலை இல்ல ஏன்னா உன் இடத்துல வேற யாராவது இருந்தா கண்டிப்பா நான் ஏத்துக்கிட்டு இருந்து இருக்க மாட்டேன் ஆனா உன்ன பார்த்த உடனே உன் மேல ஒரு கிரஸ் வந்துடுச்சு ஆனா நானே என் மனச கட்டுப்படுத்தி வச்சு இருந்தேன் ஆனா நீ இன்னிக்கு என் கிட்ட பேசுன உடனே உன்ன என் வாழ்க்கையில இழக்க கூடாதுன்னு நினைச்சேன் அதான் உடனே சரி சொல்லிட்டேன் . சரி வா உன் அப்பா அம்மா கிட்ட சொல்லி நம்ம கல்யாண வேலையை பார்க்க ஆரம்பிப்போம் என அவன் பேசி கொண்டிருக்க
‘அதுக்கு அவசியமில்லை மாப்பிளை நாங்க இங்க தான் இருக்கோம்’ என குரல் வர இருவரும் வேகமாக திரும்பி பார்த்தனர்.
அங்கு இலக்கியாவின் அப்பா, அம்மா,செழியனின் நண்பன் மூவரும் இருந்தனர் .
அவர்கள் அருகில் வந்தவர்கள் இருவரையும் அணைத்து வாழ்த்து சொல்லினர் .
இலக்கியா அப்பா, மாப்பிளை நான் எப்படியும் உங்கள சம்மதிக்க வச்சிருக்கிற நம்பிக்கையில உங்க பிரண்டு கூட சேர்ந்து கல்யாணத்துக்கான ஏற்பாடு பண்ணிட்டேன் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் உங்கள கேட்காம எல்லாம் பண்ணதுல உங்களுக்கு எதுவும் வருத்தம் இருந்தா சொல்லுங்க மாத்திக்கிடுவோம் என
செழியன், நீங்களும் அருணும் எது செஞ்சாலும் எனக்கு ஓகே தான் உங்க விருப்பம் மாமா ஆனா எனக்கு ஒரே விருப்பம் அதுக்கு மட்டும் நீங்களும் அத்தையும் சரின்னு சொல்லணும் என
இலக்கியா அம்மா , தம்பி என்னன்னு சொல்லுங்க நாங்க பதில் சொல்றோம் இனிமே இப்படி அனுமதி கேட்காதீங்க நீங்க எங்களுக்கு மகன் தான் சரியா
செழியன், சரி ம்மா அது வந்து நான் ஒரு டாக்டர் என்னோட ஹாஸ்பிட்டல் பக்கத்துல ஒரு வீடு கட்டி இருக்கேன் ஆனா எனக்கு யாரும் இல்லைன்னு அங்க போகாம நானும் இவனும் இங்க தான் ஒரு பிளாட்ல தங்கி இருக்கோம் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என் கூட வந்து இருக்கணும் பிளிஸ் இது உங்க மகனோட சின்ன ஆசை என அன்பாக கேட்க
இலக்கியா அப்பா,அம்மா இருவரும் சிறிது நேர யோசனைக்கு பிறகு சரி என்றனர்.
அதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவன் அவர்களையும் தன் அருகில் இன்பதிர்ச்சியில் நின்ற இலக்கியாவையும் அழைத்து கொண்டு தன் புது வீட்டிற்க்கு அழைத்து சென்றான்.
ஒருவழியாக அனைத்தும் முடிந்து திருமணமும் முடிந்தது இதோ அவனின் அறையில் அவனுக்கு மனைவியாக அமர்ந்திருந்தாள் இலக்கியா.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கு பார்க்க செழியன் தன் ஸ்டிக் வைத்து ஸ்டைலாக பட்டு வேட்டி சட்டையில் நடந்து வந்தான்.
அவன் வந்த உடன் அவள் எழுந்து நிற்க்க அவள் அருகில் வந்த அவளை இழுத்து அணைத்து கொண்டவன் ரொம்ப நன்றி என் வாழ்க்கையில் வந்ததற்கு என அவள் காதருகில் கூற அவளும் அவனை அணைத்து உங்களுக்கும் என்றாள் .
அவர்கள் வாழ்க்கை அங்கு அழகாக தொடங்கியது
நன்றி***நன்றி***நன்றி
அவனை பார்த்த நொடியே அவனை விரும்பி அவனை கரம்பிடிப்போமா என நினைத்திருந்த வேளை அவள் காதலை சொல்லிய உடனே அதன் ஆழத்தை உணர்ந்து தன் மனதை மாற்றி அவளுடன் இணைந்து அவள் கரம் பற்றினான் செழியன் .
காதல் ஒரு மனிதன் மனதை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றும் என்பதை இவர்கள் வாழ்க்கை மூலம் உணரலாம்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.