எழுதியவர்:ஜெ.எம்.ஜி.ராஜவேல்
தேர்வு செய்த படம்: படம் 3
காட்டுத்தீ
வனபேசி வானொலி நிலையம்.வணக்கம்.செய்திகள் வாசிப்பது கிளியக்கா.
நம் உளவு படை நரியார்கள் அளித்த தகவல் பிரகாரம், சில நாட்டு மனித மிருகங்கள் நம் கானகத்தில் அத்துமீறி புகுந்து,உல்லாச விடுதிகள் கட்டுவது பற்றி விரிவான ஆலோசனை செய்திருக்கிறார்கள்.இதனை எதிர்த்து நம் சிம்ம ராஜா பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்போது அண்மைச் செய்தியாக வந்துள்ளது, நம் எல்லோருக்கும் ஆழ்ந்த வருத்தத்தைக் தரும்படியாக உள்ளது.சில நாட்டு மிருகங்கள் சுமார் ஆறு பேர்கள், நம் கானகத்தில் உள்ளே வந்து மது குடித்து அட்டகாசம் செய்துள்ளனர்.இதனைக் அறிந்த நம் யானையார்கள் மூவர் பலத்த பிளிறலோடு அவர்களைத் துரத்தினர்.அதனால் பீதியடைந்த மனித மிருகங்கள் தப்பி ஓடும் போது,ஒருவன் தன் வாயிலிருந்த துண்டு சிகரெட் நெருப்பை அணைக்காமல் காய்ந்த சருகுகள் மேல் போட்டு விட்டு ஓடிவிட்டான்.பலத்த காற்றின் உதவியால் கானகமெங்கும் தீ பரவிக் சில காத தூரம் பல ஆயிரக்கணக்கான மரங்களைக் அழித்தது.
அப்பொழுது தீடீரென கனத்த மழை பொழிந்ததால் பலத்த சேதம் அடைவது தடுக்கப்பட்டது.மேலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்துடன் இந்த செய்தியறிக்கை நிறைவு பெறுகின்றது.வணக்கம்
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.