வணக்கம் பட்டுஸ் 😀 தந்தையர் தினத்தை முன்னிட்டு அரூபி
தளத்தில் சொல்ல நினைத்த கதை அல்லது சொல்லாமல் மறைத்த கதைப் போட்டி ஒன்று நடைப்பெற உள்ளது.
கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்கண்ட விதிகளைப் படித்து போட்டியில் பங்கெடுத்து கொள்ளலாம். நன்றி. வணக்கம்.
ஜூன் மாதம் என்றாலே தந்தையர் தின கொண்டாட்டம்தான்.
கண்டிப்பிற்கும், வெளிக்காட்டா அன்புக்கும் அப்பாக்களை மிஞ்சிய ஆட்களே இல்லை எனலாம்.
அப்படிப்பட்ட தந்தையர்களிடம் நீங்கள் சொல்ல நினைத்த அல்லது சொல்லாமல் மறைத்த பல சுவாரசியமான கதைகள் உங்களிடம் இருக்கிறதா?!
அப்படியானால் இப்போட்டி உங்களுக்குத்தான்!
போட்டியின் விதிமுறைகள்:
* யாராகினும் கலந்துக் கொள்ளலாம்.
* வார்த்தைகள்: 100 – 200
* கதைகளை 2022arubi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டும்.
* மின்னஞ்சலில் எழுத்தாளர் பெயர், கதையின் தலைப்பு, அலைப்பேசி எண் குறிப்பிட வேண்டும்.
* போட்டிக்கான கால வரையறை: 03.06.2024 – 23.06.24
* கதைகள் அரூபி தளத்தில் பதிவிடப்படும்.
* போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள்: 26.06.24
* போட்டியின் முடிவுகள் வெளிவரும் வரை போட்டிக்காக அனுப்பப்படும் படைப்புகளை வேறெந்த இடத்திலும் பதிவிடக்கூடாது.
பரிசு:
* வெற்றி பெறுவோருக்கு வழக்கம் போல் பரிசு உண்டு.
* கலந்துக்கொண்ட அனைவருக்கும் டிஜிட்டல் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி. வணக்கம் ✌️☺️