எழுத்தாளர்: இந்துமதி
எப்பவும் சாந்தமா, மென்மையா பேசும் அப்பா உணர்ச்சி மேலிட அம்மா கிட்ட
எத்தனை வருஷமாச்சு அவனைப் பார்த்து, எனக்கு ஜிவ்வுன்னு மேலே பறக்கணும்
போல இருக்கு என சத்தமாகப் பேசுவது உலக அதிசயமாக இருந்தது ரோகிணிக்கு.
அப்பாவை இப்படி சந்தோஷப்படுத்தும் அந்த நபர் யாராக இருக்கும் என்று
யோசனை வர இன்னிக்கு நான் காலேஜ் போகலை, யாருப்பா வராங்க , எனக்குப்
பார்க்கணும் என்றாள்.
ராதாகிருஷ்ணனின் மனதில் பசுமை நிறைந்த பழைய நினைவுகள் சிவாவுடன்
அவனின் சிறுவயது நட்பு , பிரிவு எல்லாம் படம் போல ஓடியது.
இவன் ஆபீஸ் போகும் போது ஒரு நாள் அந்தப் பெண் கையில் குழந்தையோடு
வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று பஸ் ஸ்டாப்பில் யாரையோ கேட்டுக் கொண்டு
இருந்தாள்.
மளிகைக் கடை செட்டியார் வீட்டில் வாடகைக்கு வர அவர் தான் காதல் கல்யாணம்
வீட்டினர் சம்மதமின்றி. குழந்தை பிறந்து செய்தி தெரிந்து அவசரமாய் பைக்கில் வரும்
போது விபத்து நடந்து கணவர் தவறி விட அவரின் வேலை கருணை அடிப்படையில்
இவளுக்கு கிடைக்க இங்கே வந்து தங்கிக் கொண்டு வேலைக்குப் போகிறாள்
அந்தப் பிஞ்சு முகம், பிறக்கும் போதே தந்தை இல்லாத சூழல், அதைத் தாண்டி ஏதோ
ஒன்று என்னை ஈர்த்தது.
அப்பா, அம்மா இருவரும் பின்னாடி நீ வருத்தப்படக் கூடாது. நல்லா யோசிச்சு செய்
என்றார்கள்.
அவளிடம் என்னைப்பற்றி சொல்லி , இந்தக் குழந்தைக்கு அப்பாவாக விருப்பம்
என்றேன்.
என் காதல் கணவர் இருந்த மனசில் வேறு யாருக்கும் இடமில்லை.
உங்க கணவராக ஆசையில்லை , ஒரு நண்பராக இருக்க முடியும். குழந்தைக்கு நான்
அப்பா என்பது மட்டும் போதும்.
முதலில் மறுத்தவள் பின் எதனாலோ மனம் மாறினாள் . இருபது வருடங்கள் ஓடிப்
போச்சு. இந்த தேவதையைப் பார்க்க அவன் மகனுக்கு அவளைப் பெண் கேட்க என்
நண்பன் சிவா வருகிறான்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!