♦️பழமொழி:
✴️புத்து கண்டு கிணறு வெட்டு!
♦️அர்த்தம் :
✴️பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை அறிய கால்நடைகளின் செயல்பாடு, கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள்.
✴️பொதுவாக கரையான்கள், நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும்.
✴️எனவே தான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டுவது நல்ல பலனைத் தரும்.