மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?!
மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ!
முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே
முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது
முழு வளர்ச்சி அடையும் வரை
மூடிய சிப்பியின் இருளின் உள்ளே
மின்னி மிளிரும் முத்தும் வளர்ந்திடுமே
மூடிய மேகங்கள் மூடியே இராமல்
வாடிய ப(உ)யிர்களை வளரச்செய்ய மழையாகிடுமே
மூடிய மலரிதழ் மெல்ல பிரித்து
மலர்ந்து விரிந்து காய்த்து கனிந்திடுமே
மனதின் கதவும் திறந்திடும் தானே
மெய்யன்பில் முற்றி முதிர்ந்த பின்னே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா