அக்கரைப்பச்சை
அக்கரை பச்சை
அழகாக தான் இருக்கும்
எழிலோடு முகில்
மலை உரசி
கொண்டிருக்கும்
துடுப்பில்லாத
ஓடத்திலே
வழியில்லாத
ஓடையிலே
வாழ்க்கை
பயணம்
இளந்தென்றல்
வீசும் போது
தாலாட்டும்
புயல் வந்து
மோதும் போது
தடுமாறும்
அது போகும்
பாதையிலே
பயணமாகும்
தரை தட்டும்
இடம் தானே
இலக்காகும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)