அடர்ந்த வனம்!
அருகிலே பச்சையாடை உடுத்திய
மலைமகள்!
அவள் எழிலில் மயங்கி
கொஞ்சி விளையாடும்
வெண் முகில்கள்!
அடிவாரத்தில் தெளிந்த
நீர்ப்பரப்பு!
அதன் மீது மிதக்கும்
அழகிய ஓடம்!
காட்சி என்னவோ
அழகாகத்தான் உள்ளது.
அன்றும்…..
இதே காட்சிதான்……..
பரவசமானோம்…
இளமைப் பூங்காற்று
ஓடத்தில் ஏறச்சொன்னது,
புற உலகம் மறந்தோம்,
அக உலகில் உல்லாச
உலா வந்தோம்!
காதல் நதியில் மூழ்கினோம்..
ஆம் தீரா நதி!
திடீரென்று காட்டாற்று வெள்ளம்
கரை புரண்டு ஓட,
மூழ்கியது ஓடம்.
மூழ்கியது ஓடம் மட்டுமா!!!!!!
இதோ இப்போதும் இந்தப்
பேரழகை அமைதியாக
ரசித்துக் கொண்டுதான்
இருக்கிறோம் அரூபமாக……
அழகான எல்லாமே
ஆபத்துதானோ!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)