அடி பொண்டாட்டி
என்று தேடியதை விட
உன்னை தானே கண்ணாடி கண்ணாடி என்று தேடினேன் பல முறை.
நீ இருக்கும் தைரியத்தில்
அவளை ஒன்றுக்கும் அழைத்ததில்லை
ஆனால் இன்று
நான் அடிபட்ட இடத்தில்
நீ எங்கோ தொலைந்து விட்டாய்
இன்று அவள் என் முன்னால்
பனி படலமாய்
தோன்றி மறைகிறாள்.
நான் கண் மூடும் முன் ஒரு முறையாவது அவளை
பார்த்து முத்தமிட்டு விடைபெற வேண்டும்
என் கண்ணாடியே
என்னிடம் வந்துவிடு.
இல்லை,
கண்டவர்கள் அதை
என்னிடம் தந்துவிடுங்கள்.
🙏😢
பக்கத்தில் இருக்கும் வரை
அருமை புரிவதில்லை
அது பொருளானாலும் சரி
சில உறவானாலும் சரி……
🥰🙏
-மஞ்சு-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)