படம் பார்த்து கவி: அறுபத்திநாலு

by admin 3
20 views

அறுபத்திநாலு கட்டங்களுக்குள்ளே அவளது ஆட்டமனைத்தும்
அங்கொருத்தி இங்கொருத்தி என்றே இருந்தாலும்
அவரவர் ஆட்களை ஆபத்தின்றி
ஆதரிக்கவே
அறிவுடைய அத்தனை ஆட்டமும் அரங்கேற்றிடுவாள்
ஆற்றல் அதிகம் அவளிடம் இருப்பினும்
ஆட்டமெல்லாம் எதிர்த்து வரும் அன்னியரிடமே
ஆணாதிக்கம் அங்கில்லையே அரசனுக்கும் காவலவள்
அரவமிழந்து போய்விடுமே அவளழிந்து போய்விட்டாலே
பரவும் படை சூழ்ந்தாலும் பதராதவள்
கர்வம் கொண்டாடும் தன்னல தரணியிலே
ஆர்வம் கொண்டே அடுத்தவரை காத்திடுவாள்

*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!