அளக்கும் நாடா, வெறும் நாடாவல்ல நீ,
பலரின் பசியாற்றும் புண்ணிய நதி!
தையல் இயந்திரத்தின் ஓசையிலே,
உழைப்பின் வியர்வை சேர்கையிலே,
உன்மீது பதியும் ஒவ்வொரு எண்ணும்,
ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாய் மின்னும்.
ஆடைகள் நெய்து, அழகாய் அணிவித்து,
மகிழ்ச்சி சேர்க்கும் கைவினையின் சாட்சி நீ.
பள்ளி செல்லும் பிள்ளையின் புத்தகம்,
உன் உழைப்பில் உருவான புத்தகபை புது அலை.
கடன் தீர்க்கும் பணம், நோய் தீர்க்கும் மருந்து,
உன் துல்லியத்தில் பிறந்த சந்தோஷம் அது.
தையல் தொழிலாளிக்கு நீயே துணை,
கனவுகளைக் கோர்க்கும் வாழ்வின் பனை.
உழைப்பின் மதிப்பை உரைக்கும் நாடா,
பலரின் வயிற்றை நிரப்பும் ஒரு பாலம் நீடா!
உன் மதிப்பை உணர்ந்து போற்றுவோம்,
வாழ்வை வளமாக்கும் உன்னை வாழ்த்துவோம்!
இ.டி ஹேமமாலினி
படம் பார்த்து கவி: அளக்கும்
previous post
