இதயத்தின் உச்சியிலே பச்சைக் கிரீடம் வைத்தாற் போன்று
அழகான வண்ணம்!
எனவேதான்,
இதயம் தொலைத்தோர்க்கு
ஆனாய் நீயும்
காதல் சின்னம்!
பழங்களின் தன்மையில் முரண்
கொண்டதால் ‘காதலர் பழம்’
எனும் பெயர் கொண்டாயோ?!
ஆம், பழங்களுக்கு விதை
உள்ளேயன்றோ இருக்கும்,
ஆனால் உனக்கோ விதைகள்
வெளியே அல்லவா இருக்கிறது?!
உனது தாயகம் அமெரிக்காவாம்,
ஆனால் நீயோ ஆண்டிப்பட்டியில்
கூடக் கிடைக்கிறாயே!
உனது உடல் நிலவின் அம்சம்!
நிலவைப்போன்று மேடு பள்ளம்,
வாழ்க்கைத் தத்துவத்தை அன்றோ உரைக்கின்றாய்!
புளிப்பும் இனிப்புமான உன் சுவை
கூறுவதும் உயரிய தத்துவமே!
உன்னில் அருமருந்து பலஇருந்தாலும் ,
என் இனிய செம்புற்றே!
உன்னைப் பார்க்க மட்டுமே
எனக்குப் பிடிக்கும்.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)