கவிஞர்: அப்புசிவா
இனி சந்திக்கப் போவதேயில்லை
என்பதும் தெரியும்.
இனி உன்னை நினைப்பது கூட தவறென்பதும் உறைக்கும்.
எனினும்
உன் ஞாபகச்சிடுக்குகள்
மெல்ல மெல்ல புகைமூட்டமாகி
உனக்கும் பிடித்த
பட்டாம்பூச்சியாய்
என் மனத்திரையில்
சுழன்று அமர்கிறது.
உனக்குப்பிடித்த
அதே பிங்க் நிறம்.
எனக்குப் பிடித்த
அதே மென்மை
கூடவே விஷம் கலந்த
உன் பாச உணர்வும்.