- இரும்பு ரதம் *
அண்டை நாட்டின்
அதிசய கண்டெடுப்பே,!
விண்ணை பிளந்து வரும் நீ.,
நீரையும் நிலக்கரியையும் உண்டு
மேககூட்டங்களுக்கு துணையாக
தன் ஆவியை ஆர்ப்பரித்து
சூரியனை மிஞ்சும் தகதகப்பில்
கண்களை திறந்து,;!
உன் கர்ஜணையாள் ஊரே
திரும்பி பார்க்க வைத்து,;!
தண்டவாளத்தின் மீது
தாண்டவம் ஆடி
இடம் விட்டு இடம்
மாறும் இரும்பு மாளிகையே,;!
எவருமில்ல நடுக்காட்டில்
சென்றாலும் நீ தாலாட்டி
உறங்க வைத்து விடுவாய்,;!
கடல் மீது சென்றாலும்
கண்களுக்கு விருந்தளித்து
விடுவாய்,;!
நிலத்தில் சென்றாலும்
நினைவுகளில் நீங்கா
இடம்பிடித்து விடுவாய்,;!
உனை காண்பவர்களை
மனதாள் கட்டி போட்டு
தன்னுள் அர்ப்பணித்து
பயணிக்க வைக்கும்
அர்ப்புத படைப்பு நீ…,;!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)