படம் பார்த்து கவி: உடலைச்

by admin 3
10 views

உடலைச் சுற்றிலும் முட்கள்.. வாழும் கண்டம்
பொருத்தே விலங்காகவோ எலிக் குடும்ப மாகவோ
அறியப்படும் முள்ளம்பன்றிகள் தம் முட்கள்
தற்காப்புக் கவசமாம் அவற்றுக்கு … கர்ப்பம்
தாங்கிடும் பெண்ணவள் நடுவகிட்டில் கோடாய்
இழுபட்டே பயணம் செய்திடும் இம்முட்கள்
ஆகச் சிறந்த மருத்துவனாம் கேளீர்!
குத்தும் முள் எப்படி வைத்தியனாய்?
ஒருவேளை முள்ளை முள்ளால் எடுக்கும்
தந்திரமோ? முள்ளம்பன்றி மட்டுமே அறியும்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!