உயிர்த்தேன்
நிலவனும் நட்சத்திர மின்மினிகளும் இன்றி
இரவின் தீராப்பசிக்கு இரையானது கொள்ளை இருட்டு…
இருளை புசித்திருந்த இரவின் தாகம் இன்னமும் அடங்கவில்லை போலும்..
எனை சுற்றிலும் மாய இருட்டு மட்டுமே..
மாய இரவில் எனக்குள் என்ன
நடக்கிறதென நானறியேன்..
யாருமின்றி தனித்து விடப்பட்டனோ..?
என் ஆன்மா மெல்ல மேலெழும்ப
இதயத்தின் ஓசை கீழிறங்கிய உணர்வு..
நினைவுகள் எல்லாம் ஒன்று போல்
முன்வந்து காட்சிகளாக வலம் வந்தன..
என் சுவாசம் தடைபட்டு உயிர்கூட்டை
விட்டு பறந்து செல்லும் கடைசி நொடியில்
அவள் கரத்தின் ஸ்பரிசம் நெஞ்சை தீண்ட..,
மின்னல் வெட்டி சென்றதுபோல் என்
தேகத்தில் மின்சாரம் பாய்ந்தது..
இதயத்தில் ஒளிவட்டம் தென்பட
தங்க நிற வண்ணத்துப்பூச்சிகளாய்
என் நினைவுகள் மீண்டு மீண்டும் உயிர்த்தேன்..
ஆம்,
மறுமைக்குள் செல்லாமல் இம்மையில்
என் வாழ்வை அவளுடன் வாழ்ந்திடவே
மீண்டும் உயிர்த்தேன்
அவளின் தூய்மையான நேசத்தால்…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)