என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள…
என் கோபத்தை கொட்ட…
என் துரோகத்தின் வலியை உரைத்திட…
என் தோல்வியை சொல்ல…
என் நட்பை பகிர்ந்து கொள்ள…
என் ரகசிய காதலை சொல்லிட…
இத்தனையும் உன்னை அணைத்து அல்ல உன் மடி சாய்ந்து சொல்கிறேன்….
ஏன் தெரியுமா மனிதர்களை விட நீ மேலானவன்…
என் விளையாட்டு தோழன் அல்ல நீ…
என் யாதுமானவன் என்
செல்ல கரடி பொம்மையே….!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)