ஏ மரமே நீ,
இறந்தாலும் இறவாப்புகழ் கொண்டு
தந்திடுவாய் சரம் கருவிகளை!
கிதாரின் உலோகச் சரங்கள் வழி
உருகி ஓடும் ஆன்மாவின் ராகம்!,
இத்துப்போன மனதை
உயிர்ப்பிக்கும் மருத்துவரோ!
மன அழுத்தம் குறைக்கும்
மந்திர மாயாவியோ!
மழலை கண்ணுறங்கப் பாடும்
அன்னையின் தாலாட்டோ!
மரமே நீ காற்றுடன் கொண்ட
காதலும் இசையே!
கிதாராக மாறிய பின் அதை
மீட்டினாலும் கிடைப்பது இசையே!
இசைக்கு மயங்காத உயிர்களும்
உண்டோ இப் புவிதனிலே!
“ஈதல் இசைபட வாழ்தல்” என்ற
வள்ளுவனார் வாக்கை
மெய்ப்பிக்கிறாயோ?….
இவ்விடத்தில் இசையை
இசையாகவே கொள்வோமே!
மரித்தாலும் பல வடிவங்களாக
உயிர்த்தெழும் மரமே,
நீயும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையோ?!
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)