கடினத்தின் உறுவமாய்
நீ இருக்க..
என் காதலின் ஆழமே..
உன்னை சிதறச்செய்த
கருங்கற்களடா..
நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூட
மதுரமானதே..
உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..
வெண்மை கலந்த
எண்ணையாய்
உறுமாறிக்கொண்டாய்.
கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீ
அந்த தென்னையின்
வழித்தோன்றலாய்….
🤍இளயவனின் நறுமுகை இவள் 🤍
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)