கருப்பு சேலையில், சிவப்பு கரை மின்ன,
இடையினில் ஜொலிக்கும் ஒட்டியாணம்.
ஒவ்வொரு அசைவிலும், கலை நளினம்,
தேவதையும் தோற்கும் பேரழகு இதுவோ!
மங்கையின் மேனியில், ஒட்டியாணம் ஆட,
கண்களும் மனமும் அதில் லயிக்க,
பாரம்பரியமும் நவீனமும் சங்கமிக்க,
அழகுக்கு இலக்கணம் நீதானோ பெண்ணே!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி : கருப்பு
previous post