கருப்புப் பாலைவனம் விரிந்த சாலையில், புகை மண்டலம் சூழ்ந்த வானம்…
சீறிப்பாயும் கருஞ்சிறுத்தை போல, உறுமுகின்றது இருசக்கர வாகனம்…
தலை கவசத்துக்குள் மறைந்திருக்கும் வீரனின் கனவுகள் ஆயிரம் பூக்கும்…
எல்லைகள் இல்லா உலகை நோக்கி, மனக்கண் திறந்து பார்க்கும்…
அலைகடலின் ஆழத்தையும், உயர்ந்த மலையின் முகட்டையும் தொட்டு வரத் துடிக்கும் வேகம்…
சாகசப் பயணமொன்றில் திளைத்து, தன் இலக்கை அடைந்திடத் துடிக்கும் நெஞ்சம்…
இளம் ரத்தம் சூடேற்ற, சாதனை புரியும் வேட்கை பொங்கும்…
சொல்லும் வழியில் நன்மையும் தீமையும் கலந்திருக்கக் கூடும்…
அத்தனையும் அறிந்த மனது, முறையான சாகசத்தில் திளைக்க விரும்பும்…
வெற்றியின் சின்னமாய், பெருமையின் மகுடத்தை சூடிக்கொள்ளத் துடிக்கும்…
பயணம் நீளட்டும், தடைகள் விலகட்டும், வீரன் தன் இலக்கை வெல்லட்டும்…
புகை மூட்டம் விலகி, புதிய உதயம் பிறக்கட்டும்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கருப்புப்
previous post