காற்றோடு கலந்து, கானகத்தில் நடமாடும்
கனவுப் பூ இவள்…
அம்பர் நிறத்தாள், ஆடும் கோலமதை,
அண்டம் வியக்கும் அழகிய சிலை இவளாய்…
இயற்கையின் படைப்பில் தோன்றிய அதிசயம் இவள் அல்லவோ?
மரத்தின் பிசினில் உறைந்த உயிர் ஓவியமாய்,
காலம் உளி கொண்டு செதுக்கிய சிற்பமாய்…
இது இயற்கையின் அற்புதமிக்க கலைப் படைப்பா?
அல்லது மனிதனின் கைவண்ணத்தில் மலர்ந்ததா?…
யாரும் அறியா ரகசியமாய், மௌனமாய்த் திகழும் இவள்,
மெல்லிய பூந்தளிராய் மின்னுகிறாள்..
மனம் மயக்கும்
அழகுப் புதையலாய் காட்சி தருகிறாள்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கற்றோடு
previous post
