காதல் ஓடம்
கலகலவென சிரிப்பும்
கொலுசு ஒலியும்
கருங்கூந்தல் காற்றிலாட
கயல்விழியில் காதல்
ததும்பி வழிய…
மையலால் பேச்சிழந்து
முகம் நோக்காது
உள்ளத்தில் உள்ளதைச்
சொல்ல துடித்த
உள்ளம் நிலைமாறி……
விழியிலே மலர்ந்து
என்னில் நீயும்
உன்னில் நானும்
காதல் கடலில்
கரை சேர ஓடங்களாய்….
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)