நம் காதல் நினைவுகள் எல்லாம்
குப்பைகளாம் யார் சொன்னது?
சில மாணிக்கங்கள்
கூட குப்பைகளில் தான் இருக்கின்றன…
உன் நினைவுகள்
ஞாபக குப்பைகளென
சொல்லுகிறார்கள்…
அவர்களுக்கெப்படி தெரியும்
அவை ஞாபக சின்னங்கள் என…
என் வீடு மட்டுமே சுத்தம்
என் அசுத்தங்கள் அனைத்தும்
தெருவிற்கென நேர்ந்து விட்டேன்…
வெளியே காட்டாத
குப்பைகள் மனமெங்கும்
நிரம்பி இருக்கின்றன
முகப் பூச்சு, இதழ் சிரிப்பு,
இன்ன பிற இத்யாதிகள்
நல்லவனென்று காட்ட…
கங்காதரன்