தேகம் அதன் அங்கம்
வேகத்துடனும் விவேகத்துடனும்
மானசீமாக ஒத்துழைத்தால்
அதுவே ஆரோக்கியம்…
ஆனால்…….
உடல் இயந்திரம் இல்லை
ஊடல் கொண்டு சில
நேரம் இயங்க மறுத்து
அங்கங்களில் வீக்கத்துடன்
பங்கம் வந்தால்…
தங்கமென குளிர் ஜெல்
ஒத்தடம் என்ற தாய்
இருக்க சென்று விடுமே
வீக்கமும் தேக்கமும்…..
குளிர்ந்த ஒத்தட ஜெல்
மிளிர்ந்து லேசாகத் தொட
சிலிர்த்த தேகம்
உற்சாகமடைவது உறுதி
உஷா முத்துராமன்