சன்னலோரக் காவியமே
இயற்கை தந்த ஓவியமே!
இதயத்து முட்களையும் இரவின் தனிமையில்
இதமாய் வருடும் மழைமகளே!
சன்னலோர ஈரக்கோடுகள்
கன்னத்தை வருடும் சாரல்கள்
மின்னலாய் மின்னும் பூக்கள்
மின்மினியின் களியாட்டங்கள்
புல்லின் மேல் பனித்துளி
மெல்ல வருடும் அவள் நினைவுகள்
ஆஹா!
காதல் மனதில் அப்படியோர் கவிதை கொட்டும்.
ஆனால் யதார்த்தம் என்னவோ………..
மனிதன் பூமியில் வாழ ,,
மரங்களை வெட்டி, நீர் நிலைகளை அழித்து,
மலைகளைத் தகர்த்து,,,,,,,,,,,,,கொடுமை
பல புரிந்தாலும்,,, இயற்கை என்னவோ
சூல் கொண்ட மேகத்தைக் கொண்டு
நாம் சூடாக்கும் பூமியைக் குளிரவைக்க
மழையாய்ப் பொழிந்து நம்மை மகிழ்விக்கிறது!
போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில்
கர்ணன் துடிக்கும்போது யாசிக்கும் கண்ணன்!
புண்ணியத்தைத் தானம் கொடுப்பானே கர்ணன்,
ஓ மழைமகளே! நீயும் கர்ணனே!.
மு.லதா
படம் பார்த்து கவி: சன்னலோரக்
previous post