சாக் பீஸ் கோலங்கள்
அடுக்கு மாடி குடியிருப்பில்
அண்டை வீட்டு வாசல்கள்
அருகருகே இருப்பதால்
வண்ண வண்ண மாவு கொண்டு
கோலம் போடும் காலம் ஓய்ந்து
வண்ண வண்ண சாக்பீஸ் கொண்டு
குட்டி குட்டி கோலங்கள்
வாசலிலே அலங்கரிக்க
மிச்சம் மீதி துண்டுகளை
குட்டிக் குழந்தை கையில் எடுத்து
சுவரெல்லாம் சுற்றி கிறுக்கி
மாடர்ன் ஆர்ட் ஓவியமாக்கி
குட்டி குட்டி கைகள் விரித்து
பெரிய கதைகளாய் சொல்லும் பொழுது
வண்ண வண்ண சப்பிஸ் கோடுகள்
மனதை மயக்கி போகிறதே..
— அருள்மொழி மணவாளன்.
படம் பார்த்து கவி: சாக்
previous post