- சிகப்பு தேவதை *
இயற்கை அன்னையின்
அழகு தேவதையே,;
உதிரம் உறைந்த நிற தேகம்
கொண்ட உன்னை
ரசிக்காதவர்கள் இலர்,;
ரசிக்கும் கண்களை
உரைய வைத்தாளும்
உனை ருசிக்காதவரும் இலர்,;
அண்டத்தின் மொத்த அழகை
குத்தகை எடுத்து சிவப்பு கம்பல
பட்டாடையில் பச்சை கிரீடத்தை
தலையில் வைத்து,
கொள்ளை அழகை
சிறையெடுத்து விட்டு
சிறிதும் தலைக்கனமின்றி,;
வட்ட வடிவ பேலை இருந்தும்
சிந்தி சிதறி வண்ணமயமாய் படுத்துறங்குகிறாயோ,;!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)