தலைப்பு : சிதறிய சில்லுகள்
ஹரியையும், ஹாரனையும் ஒன்றிணைந்த தேங்காய்,
பூஜைக்கு மட்டுமல்ல!
அனைத்து பாகங்களும் பிறர்க்கு உதவவே பிறப்பெடுத்த நல்லெண்ணத் தூதன் இவன்…
நெய்விளக்கேற்றி
வழிபடவும்,
சூரைக்காய் உடைத்து நன்றி நவிலவும்,
சிதறிய சில்லுகளை கைப்பற்ற சிறுவர், பெரியோர் முதல் குரங்குக் குட்டிவரை
நடக்கும் போராட்டம்
கண்ணுக்கு இனியவை!!
முக்கண்ணனிற்கு இணையாக இவ்வுலகிற்கு அவதரித்தவனே
இந்த தேங்காய்.
ஒற்றை பல்லை வைத்து சில்லுகளை ஆகர்ஷிக்கும் குழந்தை முதல் பெரியவர் வரை சந்தோஷிக்கும் இவனே சிறந்த பிறவி…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)