சிதறிய தேங்காவாய்
உடைந்து போனது
என் மனது
சொல்கின்ற காதலை
நிராகரிப்பது தவறில்லை
அவமதிப்பது தான்
ஆகச் சிறந்த பாவம்
முக்கண் உடைய
தேங்காயை உடைத்து
பத்தையாக்கி
சந்தைப்படுத்துவதை போல
பாவமேதும் செய்யாத
சாமானியனை
பார்வையாலயே
பாழ்யாக்கினாய்
பாவம் உனது
பழி எனதா?
உனக்காக
அந்த இரட்சகனை போல்
சிலுவைகளையும்
சுமந்து கொள்கிறேன்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)