தாலாட்டும் இசையே
இன்பத்தில் இன்றியமையாததும்
இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்
வாழ்வில் கொட்டி கிடக்கும்
கோடி இன்பங்களுக்கு கை
கோர்த்து நிற்பது இசையன்றி
இவ்வையகமில்லை என்பது
ஏட்டில் இல்லா உண்மை,!
மறத்து போன பல இதயங்களுக்கு
நீயே மருந்தாகிறாய்,!
உன்னில் மயங்காத மனமில்லை,
உன் சிறையில் மீலா
செவிகளில்லை,!
உயிருள்ள மரமான உன்
உயிரை அருத்து
உயிரூட்டும் உயிரில் கலந்த
இசையை உலகிற்கே
அர்பணிக்கும் உன்னத படைப்பே,,,!!
நீ இன்றி என் இரவுகள்
தொடங்கியதில்லை,,,!!
உனை பற்றி வடித்ததில்
பேரானந்தம் கொள்கிறேன்.,,!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)