தேங்காய்ப் பூ
சிதறிய தேங்காய்
சில்களுக்குள் சிறியதாக
ஓர் பூ
கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லை
காதில் வைக்க இல்லை
மனம் மயக்கும் வாசமில்லை
உடலுக்கு நன்மை
ஊட்டத்துக்கு சிறந்தது
உவப்போடு உதவும்
தென்னையின் உள்ளில்
வெண் பூ
முளைத்த அதிசயத்தை
ஒரே அடியில்
உடைத்து சிதறும்படி
உளமார சொல்லும்
தேங்காய்
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)