தேன் சொட்டும் ஜாடியில்…
சுற்றி வரும் தேனீக்கள்
கூட்டம்…
பூவிலிருந்து
கவர்ந்திழுக்கப்பட்ட
தேன்…
மனிதரால் கவரப்பட்ட கண்ணாடி குடுவைக்குள்…
கண்ணாடியின் பிரதிபலிப்பு
அழகாய் காட்ட…
கூடிய கலயத்தின் மேல் நர்த்தனமாடும் தேனீக்கள்…
தன் உழைப்பின் விருந்தை சுவைக்க முடியா ஏக்கத்தில்…
இங்கும் அங்கும் ஓடித் திரிய
மஞ்சள் நிறத் தேன் மணிகள் சிதறி…
காட்சியளிக்கும் ஒரு தேன் நதி அங்கு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: தேன் சொட்டும்
previous post