நறு நறு வென்று
நறுக்க மட்டுமா கத்தி?
மனிதனின் கோபத்தினால்
கண்சிவக்க
நரம்புகள் வெடிக்க
புத்தியற்று தொழிற்படுமாம்
கத்தியாம் கத்தி
யுத்தம் செய்து
ரத்தம் சிந்தி
கழுத்தறுத்து தொங்கவிட
ஒருவண்முறை
வெடித்து ஒலிக்குமாம்
கையறுத்து காதல்
தோல்வியில்
சோக சங்கீதம் பாட
ஒரு ஆயுதம்மாக
தொழிற்படுமாம்
கத்தியாம் கத்தி
உயிரை எடுக்கும் கத்தி
உயிரை காக்கும் கத்தி
கத்தி குத்தி
கிழிக்கும்
கயவர்களை
கத்தியின் சக்தியால்
என்றும்
ஜெயம் ஜெயம்
ஜெயம்தான்….
M. W kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)