நீ ஆணா?பெண்ணா தெரியாது .
கருப்பா?சிவப்பா தெரியாது .
உன் முகம் காண
முப்பொழுதும் உன் நினைவுகள்
நீ வரும் முன்னே
எத்தனை ,எத்தனை
கோடி கனவுகள்
என்னை உன்னில் காண நினைத்தேனடா ..
நீ வர போகும் நாட்களுக்கு முன்பே
உனக்கு வேண்டியவற்றை
என் பழைய பெட்டியில்
புதியதாய் புதைத்து வைத்தேனடா …
வாழ்க்கை
ஆறில் தொடங்கி அறுபதில்
முடியும் என்றேனா
முட்டாள் முன்னோர்கள் .
விதிவிலக்காய்
நீயோ
ஆறே மாதத்தில்
என் கண் காணாமல்
சிதைந்து போனாயடா …..
உன்னை சுமந்த வயிற்றின் வலி
சில மாதத்தில் ஆறிவிடும் …
என் மன வலி எப்போது மாறுமோ ??
என் வாழ்வின் அடையாளமாய்
நீ இருப்பாய் எண்ணிருந்தேன்.
மிஞ்சி இருப்பது
நான் எழுதிய வெற்று காகிதங்கள்
வெறுமையாய் சிரித்தன
என்னை போலவே !
-நௌஷாத் கான் .லி –
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)